கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மது மற்றும் கஞ்சா ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அருந்திய இரண்டு இளைஞர்கள், எதற்குச் சண்டையிடுகிறோம் என்று தெரியாமலே இருவரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதில், இருவருக்கும் கை, கால், கழுத்து, உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்துள்ளதுள்ளது. இதனையடுத்து, சிகிச்சை மேற்கொள்வதற்காக இருவரும் சேர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது அங்குப் பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் கஞ்சா போதையில் உள்ள இளைஞர்களிடம் விசாரணை செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
காவலர்கள் கட்டிடத்தை விட்டுச் சென்று விட்டத்தை அறிந்த போதை ஆசாமிகள், ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நோயாளிகள்,மருத்துவனை ஊழியர்கள், மருத்துவர்களையும் உள்ளிட்டவர்களைத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் பாபு என்பவர், ரகளையில் ஈடுபடும் இளைஞர்களைத் தடுக்க முயன்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் காவலரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் நகரக் காவல் துறையினர் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் நோயாளிகள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுடன் ரகளையில் ஈடுபட்டதுமட்டுமல்லாமல் தடுக்க வந்த காவலரையும் தாக்கியதால் மருத்துவ வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க:தேர்தல் பத்திரம் மூலம் பல கோடி நன்கொடை பெற்றது பாஜக.. ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு!