ஐதராபாத்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை ஐசிசி வெளியிட்டுள்ளது. சமீபத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தரவரிசையை வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்கா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கயானாவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் 1-0 என முடிந்தது. இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிகள் பட்டியலில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை 38.59 புள்ளிகளை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை இழந்து தரவரிசையில் பின் தங்கி உள்ளது. அந்த அணி ஒன்பது போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று தற்போது 18.52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.