சென்னை:உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா திரும்பிய தமிழகத்தை சேர்ந்த செஸ் சாம்பியன் டி.குகேஷுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கும் வகையிலும், தாயகத்திற்கு வரவேற்கும் வகையிலும் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் இட்லி இனியவன் ஏற்பாட்டில் 60 கிலோ அரிசி, 12 கிலோ உளுத்தம் பருப்பு மாவு சேர்த்து அரைத்த ஆறடி நீளம், ஆறடி அகலம் கொண்ட பிரம்மாண்ட இட்லியை தயாரித்து காட்சிப்படுத்தி வைத்துள்ளனர்.
தமிழ்நாடு சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்க தலைவர் இனியவன் தலைமையில் 12 சமையல் கலைஞர்கள் இட்லியில் செஸ் போர்டு செய்து அதில் குகேஷ் உருவத்தை தயார் செய்ததாக கூறுகிறார் இட்லி இனியவன். மேலும், ஈடிவி பாரத்திற்கு செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், "குகேஷ் இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் குகேஷ் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மிகுந்த பெருமையை தேடி தந்துள்ளார்.
இதையும் படிங்க:எனது வெற்றிக்கு இதுதான் காரணம்! உலக செஸ் சாம்பியன் குகேஷ் பெருமித பேச்சு!
இவர் 18 வயதில் இவ்வளவு பெரிய சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் பாராட்டி வரவேற்கும் வகையில் இந்த 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட சதுரங்க இட்லியை தயார் செய்தோம். அதில் குகேஷ் உருவத்தையும் வைத்து காட்சிபடுத்தியுள்ளோம். இதைக் காண வருபவர்களுக்கு இனிப்புகளை வழங்கி எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறோம்.