தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Women's premier league 2024: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது.

Women's premier league 2024
மகளிர் பிரீமியர் லீக்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 10:40 PM IST

Updated : Feb 24, 2024, 9:21 AM IST

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது சீசன் இன்று (பிப்.23) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்தது. 3வது ஓவரின் முதல் பந்தில் ஷஃபாலி வர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங்குடன், ஆலிஸ் கேப்ஸி கைக்கோர்த்தார். இந்த கூட்டணி டெல்லி அணிக்கு ரன்களை சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய மெக் லானிங் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில், 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸியுடன் இணைந்து ரன்களை சேர்த்தார். இருவரும் மும்பை அணியின் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கு விளாசினர். இதில் அலிஸ் கேப்ஸ் தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அலிஸ் கேப்ஸ் 9 ஃபோர்கள், 3 சிக்சர்கள் என மொத்தம் 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து மறுமுனையில் விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மற்றும் அமெலியா கெர் தலா 2 விக்கெட்களும், ஷப்னிம் இஸ்மாயில் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதில், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கி விளையாடியது. இதில் தொடக்க வீராங்கனையான ஹேலி மேத்யூஸ் டக் ஆவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, களம் கண்ட நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 90 ரன்கள் சேர்த்தது. யாஸ்திகா பாட்டியா 51 ரன்களுடனும், ஹர்மன்ப்ரீத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் விளையாடினர்.

பின்னர், யாஸ்திகா பாட்டியா - ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி மாறி மாறி பவுண்டரியை விளாசி அணிக்கு ரன்களை குவித்தனர். அருந்ததி ரெட்டி வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் யாஸ்திகா பாட்டியா அவுட் ஆனார். அதன்பின் அமெலியா கெர் களமிறங்கினார். 15 ஓவர் முடிவிற்கு 120-3 என்ற கணக்கில் விளையாடினர்.

18வது ஓவரில் அமெலியா கெர் 24 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். பின், பூஜா வஸ்த்ரகர் களம் கண்டார். அப்போது 150- 4 என்ற கணக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. வெற்றி பெற 22 ரன்கள் தேவையாக இருக்கும் பட்சத்தில், ஹர்மன்ப்ரீத் கவுர் சிக்ஸ் விளாசி அணிக்கு ரன்களை குவித்து, அரை சதத்தைப் பதிவு செய்தார்.

பூஜா வஸ்த்ரகர் சொற்ப ரன்களில் அவுட் ஆக, அமன்ஜோத் கவுர் களம் கண்டார். பின், ஹர்மன்ப்ரீத் கவுர் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெற்றி பெற 5 ரன்கள் இருக்கும் நிலையில் சஞ்சனா கடைசி பந்தில் சிக்ஸ் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:4வது டெஸ்ட் போட்டி; ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு.. ஜோ ரூட் சதம் விளாசல்!

Last Updated : Feb 24, 2024, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details