தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலி - பட்டிதர் அரைசதம்.. ஹைதராபாத் அணிக்கு 208 ரன்கள் இலக்கு! - RCB Vs SRH

RCB Vs SRH: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.

RCB vs SRH
RCB vs SRH

By PTI

Published : Apr 25, 2024, 9:48 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 41வது போட்டி இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கினர். நல்ல தொடக்கத்தை கொடுத்த இந்த கூட்டணி பெரிதாக நீடிக்கவில்லை. டு பிளெசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து வில் ஜாக்ஸ் 5 ரன்களில் வெளியேற, ராஜத் பட்டிதர் - விராட் கோலி கூட்டணி சிறுது நேரம் நீடித்து அணிக்கு ரன்களைச் சேர்த்தது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய விராட் கோலி, மறுபக்கம் விக்கெட்கள் சரிய சரிய அவரின் வேகம் குறைந்தது. ஆனால், ராஜத் பட்டிதர் திறன்பட விளையாடி 5 சிக்சர்கள், 2 ஃபோர்கள் உட்பட 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணிக்கு ரன்களைச் சேர்த்த பின்னரே வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 51 ரன்கள் எடுத்த நிலையில்,ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் தினேஷ் கார்த்திக் 11, மஹிபால் லோமரோர் 7, ஸ்வப்னில் சிங் 12, கிரீன் 37 ரன்களும் எடுத்தனர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்களும் நடராஜன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க:"உலக செஸ் சாம்பியன் தொடருக்கான பயிற்சி எப்போது?" - கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேட்டி! - Indian Grandmaster Gukesh

ABOUT THE AUTHOR

...view details