சண்டிகர்:பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து இருந்த வினேஷ் போகத் (Vinesh Phogat), நிர்ணயிக்கப்பட்டத்தைவிட 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பாட்டர்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை மல்யுத்த போட்டிகளிலிருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "இனி போராட சக்தியில்லை" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
வினேஷ் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், கடைசிவரை போராடிய அவருக்கு பலரும் ஆறுதல்களையும், தங்களது வாழ்த்துகளையும் கூறு வருகின்றனர். இந்தநிலையில் வினேஷ் போகத்தை, வெள்ளி பதக்கம் வென்ற வீரரைப் போல் நடத்துவோம் என ஹரியான அரசு அறிவித்துள்ளது.
பாராட்டு விழா:இது குறித்து அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "எங்கள் துணிச்சலான மகள், ஹரியானாவைச் சேர்ந்த வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஆனால் சில காரணங்களால், அவரால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது.