தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தகர்ந்தது இந்திய அணியின் 40 ஆண்டு கால சாதனை... ஒரு நாள் போட்டியில் அமெரிக்கா புதிய உச்சம்! - USA CRICKET RECORD

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சொற்ப ரன்களில் எதிரணியை டிஃபெண்ட் செய்த அணி என்கிற சாதனையை படைத்தது அமெரிக்க அணி.

அமெரிக்க அணி (கோப்புப்படம்)
அமெரிக்க அணி (கோப்புப்படம்) (Credit - AFP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 1:40 PM IST

ஓமன்: ஓமனுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அமெரிக்கா அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அல் அமெராட்டில் நேற்று (பிப்.18) நடந்த போட்டியில் அமெரிக்க அணி வெறும் 122 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

123 ரன்கள் இலக்கை அடைய களமிறங்கிய ஓமன் அணி 65 ரன்களில் ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சொற்ப ரன்களில் எதிரணியை டிஃபெண்ட் செய்த அணி என்கிற சாதனையை படைத்தது அமெரிக்க அணி.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் திருத்தப்பட்ட இலக்கு அல்லது குறைக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளைத் தவிர்த்து, வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்ட மிகக் குறைந்த ரன்கள் இதுவாகும்.

இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா குறைந்தபட்ச ரன்களில் டிஃபெண்ட் செய்ததே சாதனையாக இருந்தது. ஷார்ஜாவில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 125 ரன்களை எடுத்திருந்தது. சேசிங்கில் ஆடிய பாகிஸ்தான் அணியை இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் அமெரிக்க அணி ஓமன் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அந்த இந்திய அணியின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.

இதையும் படிங்க:ICC Champions Trophy 2025: தந்தை மரணம்.. போட்டிக்கு முன்பே இந்திய அணிக்கு பெரும் அடி! வீடு திரும்பிய பயிற்சியாளர்!

மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 4,671 போட்டிகளுக்குப் பிறகு ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஒரு பந்து கூட வீசாமல் நிறைவடைந்த முதல் ஆண்கள் ஒருநாள் போட்டி இதுவாகும்.

நேற்றைய போட்டி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அமெரிக்க அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நோஸ்துஷ் கெஞ்சிகே பவுலிங்கை சிறப்பாக கையாண்டார். இவர் 7.3 ஓவர்களில் 5/11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓமன் அணியை 65 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

மொத்தமாக இரு அணிகளும் 61 ஓவர்களில் 187 ரன்கள் மட்டுமே எடுத்தன. இது இரு அணிகளும் ஒன்றாக ஆல் அவுட் ஆன ஒருநாள் போட்டியில் இரண்டாவது குறைந்தபட்ச ரன்கள் ஆகும். 2014 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான போட்டியில் இரு அணிகளும் 41 ஓவரில் 163 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதுதான் மிக குறைந்த ரன்களாக இருந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details