ஐதராபாத்:டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் தெற்கு மற்றும் வடக்கு டெல்லி அணிகளுக்கு இடையே லீக் ஆட்டம் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தெற்கு டெல்லி அணியை சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா என்ற வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளார்.
வடக்கு டெல்லி அணியைச் சேர்ந்த மனன் பரத்வாஜ் வீசிய 15வது ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்சர்களை பறக்க விட்ட பிரியான்ஷ் ஆர்யா அந்த ஓவரில் மட்டும் 36 ரன்களை திரட்டினார். இதன் மூலம் டெல்லி பிரிமீயர் லீக் கீரிக்கெட் தொடரில் ஓரு ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சிறப்பை பிரியான்ஷ் ஆர்யா பெற்றார்.
முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு 20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 6 சிக்சர்களை விளாசி இருந்தார். தற்போது இந்த சாதனையை முதல் தர கிரிக்கெட் போட்டியில் பிரியன்ஷ் ஆர்யா சமன் செய்து உள்ளார்.
மேலும், பிரியான்ஷ் ஆர்யா 50 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் தெற்கு டெல்லி அணி மொத்தம் 7 பவுண்டரி 6 சிக்சர்கள் விளாசி 42 பந்துகளில் 88 ரன்கள் குவித்தது. அதேநேரம் தெற்கு டெல்லி அணியின் மற்றொரு வீரர் ஆயுஷ் பதோனி மொத்தம் 55 பந்துகளில் 165 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
அபாரமாக விளையாடிய தெற்கு டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. முதல் தர 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஐபிஎல் சீசனில் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து இருந்தது.
இது தான் இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்சமாக இருந்தது. தற்போது இந்த சாதனையை தெற்கு டெல்லி அணி முறியடித்துள்ளது. அதேநேரம் 20 ஓவர் கிரிக்கெட்டில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்ததே இதுவரை பதிவான அதிகபட்ச ஸ்கோராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பவுன்சர் பந்துகளுக்கு பிசிசிஐ செக்! வேகப்பந்து வீச்சாளர்களின் கதி என்ன? - BCCI New Cricket Rules