ஐதராபாத்: மும்பையில் நடைபெற்ற தனியார் விருது விழா நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது விருது விழா நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக ரோகித் சர்மா வந்தார். விருது நிகழ்ச்சியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
மற்ற வீரர்கள் முன்வரிசையில் அமர்ந்து இருந்தனர். இந்நிலையில் ரோகித் சர்மா வருவதை கண்ட இந்திய அணியின் வீரர்கள் அவரை வரவேற்றனர். பின்னர், இரண்டாவது வரிசையில் ரோகித் சர்மா உட்கார முயன்றார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்து இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் உடனே எழுந்து நின்று தன்னுடைய இடத்தில் அமருமாறு ரோகித் சர்மாவிடம் கூறினார்.
இருப்பினும், அதை ஏற்றுக் கொள்ளாத ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயரை அந்த இருக்கையில் அமரவைத்து விட்டு, இரண்டாவது வரிசையில் தனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இருப்பிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், வீடியோவின் கீழ் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.