தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 உலக கோப்பை 2024: இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்கும் அந்த 7 பேர்! - T20 World Cup Cricket Final 2024 - T20 WORLD CUP CRICKET FINAL 2024

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெல்லும் என ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு வித்திடப் போகும் 7 தூண்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Indian players (AP Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 5:43 PM IST

பார்படோஸ்:ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இன்று இரவு தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. நடப்பு 20 ஓவர் உலக கோப்பை சீசனில் இரண்டு அணிகளும் தோல்வியே தழுவாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. ஐசிசி டிராபியை இந்திய அணி கைப்பற்றி ஏறத்தாழ 11 ஆண்டுகளாகின்றன.

கடைசியாக 2013ஆம் ஆண்டு கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பின் இரண்டு முறை ஒருநாள் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்ற போதிலும் இந்திய அணியால் உலக கோப்பையை உச்சி முகர முடியவில்லை.

140 கோடி இந்தியர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலமும் முடிவடையும் நிலையில், உலக கோப்பையை வென்று அவருக்கு இந்திய வீரர்கள் பரிசளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய மற்றும் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்லும் வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய ஏழு பேர் தூண்களாக விளங்குகின்றனர்.

இந்த ஏழு பேரும் ஒரு சேர இன்றைய ஆட்டத்தில் ஜொலிக்கும் நிலையில் இந்திய அணி வெற்றிக்கும் கிட்டும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இதில் ரோகித் சர்மா நடப்பு சீசன் முழுவதும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி துரிதமாக ரன் சேகரிப்பதும், அணியை கட்டுக்கோப்புடன் நடத்திச் சென்று வீண் நேர விரயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் அணி சிக்கிக் கொள்ளாதவாறு வெற்றி வாகை சூடி வருகிறார்.

சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். அதேபோல், அரைஇறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் மழை உள்ளிட்ட இடர்களுக்கு மத்தியில் 57 ரன்கள் குவித்தார். நடப்பு உலக கோப்பை சீசனில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் (420 ரன்) அடுத்த்தபடியாக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் ரன் குவிக்கும் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, உலக கோப்பை சீசன் முழுவதும் தனது மோசமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாகி உள்ளார். கடந்த 8 ஆட்டங்களில் அதிகபட்சமாக அரைஇறுதியில் மட்டும் விராட் கோலி 97 ரன்கள் குவித்துள்ளார். மற்ற ஆட்டங்கள் அனைத்திலும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார்.

ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை அணி ஸ்கோர் குவிக்க முடியாமல் திணறுகின்ற போதெல்லாம் அடித்து ஆடி ரன் விகிதத்தை சீராக உயர்த்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்க விட்ட ஹர்திக் பாண்டியா அணி 170 ரன்களை தாண்ட முக்கிய பங்காற்றினார்.

அர்ஷ்தீப் சிங், நடப்பு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராவார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தாத போதிலும் நடப்பு உலக கோப்பை தொடரில் 15 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இடக்கை லெக் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் கரீபியன் நாடுகளில் இயல்பாகவே சிறப்பாக பந்துவீசக் கூடியவர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், முன்னதாக இதே பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கடைசியாக கடந்த ஆட்டத்தின் நாயகன் அக்சர் பட்டேல்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதியில் விக்கெட் மற்றும் ரன் குவிப்பு என அக்சர் பட்டேலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. கடைசி கட்டத்தில் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து பறக்க விட்ட அக்சர் பட்டேல் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேபோல், பந்துவீச்சிலும் இங்கிலாந்தின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அணி வெற்றி வாகை சூட உறுதுணையாக இருந்தார்.

இதையும் படிங்க:டி20 உலகக் கோப்பை: 13 வருட ஏக்கத்தை போக்குமா இந்தியா.. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதல்! - T20 World Cup Final

ABOUT THE AUTHOR

...view details