ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கான மெக ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. எதிர்பாராத பல சம்பவங்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் நடைபெற்றன. கடந்த இரண்டு நாட்களில் 639 கோடியே 15 லட்ச ரூபாயை மொத்தம் உள்ள 10 அணிகளும் செலவழித்துள்ளன.
இரண்டு நாட்களில் 182 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 395 வீரர்கள் அன்சோல்டு என எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படவில்லை. அதிகபட்சமாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமகா ஜோஸ் பட்லர் 15 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். டேவிட் வார்னர், ஜானி பெர்ஸ்டோவ், ஷர்துல் தாகூர், முஸ்தபிசுர் ரஹமான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படாமல் அன்சோல்டு வீரர்களாகினர். அணி மற்றும் வீரர்கள் பட்டியல்:
1. சென்னை சூப்பர் கிங்ஸ்
மொத்த வீரர்கள்:25 (7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்:ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ஷேக் ரஷித், தீபக் ஹூடா, ஆண்ட்ரே சித்தார்த்.
விக்கெட் கீப்பர்: டிவான் கான்வே, எம்.எஸ் தோனி, வான்ஷ் பேடி.
ஆல்-ரவுண்டர்கள்:ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கர்ரன், ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: நூர் அகமது, ஷ்ரேயாஸ் கோபால்,
வேகப்பந்து வீச்சாளர்கள்:மதிஷா பத்திரனா, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜ்பானித் சிங், நாதன் எலிஸ்.
உத்தேச ஆடும் லெவன் அணி: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி, முகேஷ் சவுத்ரி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதிஷா பத்திரனா.
இம்பேக்ட் வீரர்கள்: கலீல் அகமது அல்லது ஷேக் ரஷித்.
2. மும்பை இந்தியன்ஸ்
மொத்த வீரர்கள்: 23 (8 வெளிநாட்டினர்)
பேட்ஸ்மேன்கள்:சூர்யகுமார் யாதவ், ரோகித் ஷர்மா, திலக் வர்மா, பெவன் ஜான் ஜேக்கப்ஸ்.
விக்கெட் கீப்பர்: ராபின் மின்ஜ், ரியான் ரிக்கல்டன், கிருஷ்ணன் ஸ்ரீஜித்.
ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, நமன் டிஹெர், வில் ஜாக்ஸ், ராஜ் அங்கத் பாவா, விக்னேஷ் புத்தூர்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: அல்லா கசன்பர், கர்ன் ஷர்மா, மிட்செல் சான்ட்னர்.
வேகப்பந்து வீச்சாளர்கள்:ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஷ்வினி குமார், ரீஸ் டாப்லி, சத்யநாராயண் ராஜு, அர்ஜுன் தெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ்.
உத்தேச ஆடும் லெவன் அணி:ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்ட்யா, நமன் தீர், அல்லா கசன்பர் அல்லது மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர்.
இம்பேக்ட் வீரர்கள்: ராபின் மிஞ்ச் அல்லது ராஜ் அங்கத் பவா.
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மொத்த வீரர்கள்:22 (8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: விராட் கோலி, ரஜத் படிதார், டிம் டேவிட், மனோஜ் பண்டேஜ், தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா.
விக்கெட் கீப்பர்:பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா
ஆல்-ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன், குர்ணால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், மோஹித் ரதி.
சுழற்பந்து வீசள்ளார்கள்:சுயாஷ் சர்மா, அபிநந்தன் சிங்.
வேகப்பந்து வீச்சாளர்கள்:ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ரசிக் சலாம், நுவான் துஷாரா, லுங்கி நிகிடி.
உத்தேச ஆடும் லெவன் அணி:விராட் கோலி ஷர்மா, பில் சால்ட், ஜித்தேஷ் சர்மா, ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், குருனால் பாண்டியா, டிம் டேவிட், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார்.
இம்பேக்ட் வீரர்கள்:ரசிக் சலாம் அல்லது ஸ்வப்னில் சிங்.
4. சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மொத்த வீரர்கள்:20 (7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: டிராவிஸ் ஹெட், அபினவ் மனோகர், அனிகேத் வர்மா, சச்சின் பேபி.
விக்கெட் கீப்பர்: ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், அதர்வா டைட்
ஆல்-ரவுண்டர்கள்: அபிஷேக் குமார் ரெட்டி, நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: ஆடம் ஜம்பா, ராகுல் சாஹர், ஜீஷன் அன்சாரி.
வேகப்பந்து வீச்சாளர்கள்:முகமது ஷமி, பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங், ஜெய்தேவ் உனட்கட், பிரைடன் கார்ஸ், இஷான் மலிங்கா
உத்தேச ஆடும் லெவன் அணி: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், அபினவ் அனிகேத், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஆடம் ஜாம்பா.
இம்பேக்ட் வீரர்: ராகுல் சாஹர் அல்லது சச்சின் பேபி.
5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மொத்த வீரர்கள்: 21 (8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட)
பேட்ஸ்மேன்கள்: ரின்கு சிங், ரோவ்மேன் பவல், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மணீஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, அஜிங்க்யா ரஹானே.
விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக், ரஹ்மனுல்லா குர்பாஸ்.
ஆல்-ரவுண்டர்கள்: வெங்கடேஷ் ஐயர், ஆந்திரே ரஸ்செல், சுனில் நரேன், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், மொயீன் அலி.
சுழற்பந்து வீச்சாளர்கள்:வருண் சக்ரவர்த்தி, மயங்க் மார்கண்டே
வேகப்பந்து வீச்சாளர்கள்:ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, அன்ரிச் நார்ட்ஜே, ஸ்பென்சர் ஜான்சன், உம்ரான் மாலிக்.