துபாய்: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதி தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்பது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டின் வருகை தான்.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த வபத்தால் கிட்டதட்ட மறுபிறவி எடுத்த அவர், எதிர் பார்த்ததை விட மிக வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் வரும் ஐபிஎல் தொடரில் ரி என்ட்ரி கொடுப்பார் என உறுதியாக சமீபத்தில் தெரிய வந்தது.
இந்த நிலையில், ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸின் சிஇஓ, பிகேஎஸ்வி சாகர், ரிஷப் பண்டின் வருகை குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "ஆம் அவர் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என நம்புகிறோம். அவர் மிகப்பெரிய வீரர். அவர் விளையாடினால் அது நமக்கு நல்லது.