தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய யு19 அணியில் சமித் டிராவிட்! ராகுல் டிராவிட் இன்புலுயன்சா? - Samit Dravid on India U19 squad - SAMIT DRAVID ON INDIA U19 SQUAD

ஆஸ்திரேலியாவுக்கு தொடருக்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்டுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணி என்ன என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
Rahul Dravid (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 31, 2024, 2:00 PM IST

ஐதராபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்டுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சமித் டிராவிட்:

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 4 நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டித் தொடரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியில் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 21 முதல் 26ஆம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரி மைதானத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

4 கர்நாடக வீரர்கள்:

இந்த நிலையில் இந்திய அணிக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அமான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ருத்ர படேல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மட்டும் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது தற்போது பேசு பொருளாகி உள்ளது.

கார்த்திகேயா, சமித் டிராவிட், சமர்த் மற்றும் ஹர்திக் ராஜ் ஆகிய 4 பேரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். அதில் சமித் டிராவிட் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கூச் பெஹார் டிராபி, விஜய் மெர்ச்சண்ட் டிராபி மற்றும் என்சிஏ பயிற்சி முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்ட வீரர்களின் ஆட்டத்தை வைத்து இந்த அணி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராஜா டிராபி:

இதில் சமித் டிராவிட் மகாராஜா டிராபி டி20 தொடரில் விளையாடி வருகிறார். தந்தை டிராவிட்டின் பெயரால் சமித் டிராவிட் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது. மகாராஜா டிராபியில் சமித் டிராவிட் குறிப்பிடும்படி விளையாடாத போதிலும் ராகுல் டிராவிட்டின் மகன் என்பதற்காக இந்திய அணியில் சமித் டிராவிடுக்கு இடம் கிடைத்ததாக நெட்டிசன்கள் புகார் பத்திரிகை வாசிக்கின்றனர்.

மேலும், பிசிசிஐ நிர்வாகத்தை தொடர்ந்து இந்திய அணியிலும் வாரிசு அரசியல் தொடங்கிவிட்டதா என்ற குழப்பம் எழுவதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு நாள் தொடருக்கான இந்திய யு19 அணி:ருத்ரா படேல் (விக்கெட் கீப்பர்), சாஹில் பராக், கார்த்திகேயா கேபி, முகமது அமான் (கேப்டன்), கிரண் சோர்மலே, அபிக்யான் குண்டு(விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (விக்கெட் கீப்பர்), சமித் டிராவிட், யுதாஜித் குஹா, சமர்த், நிகில் குமார், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ், ரோஹித் ரஜாவத், முகமது எனான்.

நான்கு நாள் தொடருக்கான இந்திய யு19 அணி:வைபவ் சூர்யவன்ஷி, நித்யா பாண்டியா, விஹான் மல்ஹோத்ரா, சோஹம் பட்வர்தன் (கேப்டன்), கார்த்திகேயா, சமித் டிராவிட், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (விக்கெட் கீப்பர்), சேத்தன் சர்மா, சமர்த், ஆதித்யா ராவத், நிகில் குமார், அன்மோல்ஜீத் சிங், ஆதித்யா சிங், முகமது எனான்.

இதையும் படிங்க:சென்னை பார்முலா 4 கார் பந்தயம்: முதல் நாள் முழு அட்டவணை! - Chennai Formula 4 Race

ABOUT THE AUTHOR

...view details