பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா தொடங்கிய 6 நாட்களில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை வென்று உள்ளது. அனைத்து வெண்கலப் பதக்கங்கள், கூடுதல் தகவலாக அனைத்து வெண்கலப் பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.
நேற்று (ஆக.1) நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். இந்நிலையில், 7வது நாளான இன்று (ஆக.2) இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
கோல்ப்: ஆண்கள் தனிநபர் ஸ்டோக் பிளே இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சுபாங்கர் சர்மா மற்றும் ககன்ஜீத் புல்லர் ஆகியோர் 12.30 மணிக்கு விளையாடுகின்றனர். சர்வதேச தரவரிசையில் 173வது இடத்த்கில் உள்ள சுபாங்கர் சர்மா, பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் மொத்தம் 17 கோல்ப் தொடர்களில் விளையாடி உள்ள சுபாங்கர் சர்மா அதில், 14 தொடர்களில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அதேபோல் சர்வதேச தரவரிசையில் 295வது இடத்தில் உள்ள ககஞீத் புல்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு: மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் இசா சிங் மற்றும் மனு பாகெர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இவர்கள் ஆட்டம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா இரண்டு வெண்கலம் வென்ற மனு பாகெர், தற்போது 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் களம் காணுகிறார். தொடர்ந்து நாட்டுக்காக மூன்றாவது பதக்கத்தை வென்று தரும் முனைப்பில் மனு பாகெர் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வில்வித்தை:கலப்பு குழு பிரிவில் எலிமினேஷன் சுற்றில் இந்தியா அணி பிற்பகல் 1:19 மணிக்கு விளையாடுகிறது.