தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி மகளிா் டி20:இந்தியாவுக்கு 106 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்! - Womens T20 World Cup 2024 - WOMENS T20 WORLD CUP 2024

டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 106 ரன்கள் இலக்காக நிர்ணயித்து உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் கோப்புப்படம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் கோப்புப்படம் (Credit - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2024, 5:36 PM IST

துபாய்:ஐசிசி சார்பில் மகளிருக்கான 9வது 'டி-20' உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டியானது துவங்கியது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் நிதா தர் 28 ரன்கள், முனீபா அலி 17 ரன்கள், சையதா அரூப் ஷா 14 ரன், கேப்டன் பாத்திமா சனா 13 ரன்களை தவிர மற்ற யாரும் ஒற்ரை இலகத்தை தாண்டவில்லை.

இதையும் படிங்க:வீரர்களுக்கு 4 மாதம் சம்பளம் பாக்கி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணியால் சேர்க்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

அதே போல் ரேணுகா, ஆஷா சோபனா மற்றும் தீப்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. கடந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

ABOUT THE AUTHOR

...view details