தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: கே.எல்.ராகுல் விலகல்! - india vs england test match

KL Rahul: இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 10:35 PM IST

ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடர் 1-1 என்ற கணக்கில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள செளராஸ்டிரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுல் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல், காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தெரிவித்துள்ளதாவது, "காயம் அடைந்த கே.எல்.ராகுல் இன்னும் முழு உடற்தகுதியை அடையவில்லை. அதனால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் இணைகிறார்" என தெரிவித்துள்ளது.

தேவ்தத் படிக்கல் நடப்பு ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் ரஞ்சியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் 151 ரன்கள் விளாசி அசத்தினார். அதேபோல் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 105 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தேவ்தத் படிக்கல் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 31 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2227 ரன்கள் குவித்துள்ளார். அதில் சதங்கள் மற்றும் 12 அரைசதங்களும் அடங்கும்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல்.

இதையும் படிங்க:"சட்டம் அனைவருக்கும் பொதுவானது.. அரசு அதிகாரி என்பதால் விலக்கு பெற முடியாது"- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

ABOUT THE AUTHOR

...view details