கவுகாத்தி:ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற இருந்தது. 7.00 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, மழையின் காரணமாக தொடங்காமல் இருந்தது.
சற்று நேரத்திற்கு முன்பு மழை நின்றவுடன் மைதானத்தை தயார் செய்து விட்டு டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மழையின் காரணமாக இப்போட்டி 7 ஓவராக மாற்றப்பட்டது.