தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிஎஸ்கே VS ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்! - IPL 2024 - IPL 2024

CSK VS RR: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான போட்டியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புகைப்படம் (Credit to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 2:30 PM IST

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான போட்டியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை(மே.9) காலை 10.40 மணிக்கு தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 6 போட்டியில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 3 இடத்தில் உள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல சென்னை அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது ஹோம் கிரவுண்ட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு (12.05.2024) நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனையானது நாளை (09.05.2024) காலை 10.40 மணிக்கு ஆன்லைனில் விற்பனை தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி www.insider.in என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற கட்டுப்பாட்டையும் உள்ளது.

டிக்கெட்டின் விலை விவரங்களையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ரூ.1700 முதல் அதிகபட்சமாக ரூ.6000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதன் முறையே C, D, E லோயர் இருக்கைக்கு ரூ.1700, I, J, K அப்பர் இருக்கைக்கு 2500 ரூபாயும், I, J, K லோயர் இருக்கைக்கு 4000 ரூபாயும், C, D, E அப்பர் இருக்கைக்கு 3500 ரூபாயும், K, M, K மொட்டை மாடிக்கு 6000 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், டிக்கெட் பதிவு செய்பவர்கள் எந்த நுழைவாயில் வழியாக வர வேண்டும் எனவும், வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் எனவும் அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில், புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், சென்னை அணி மோத இருப்பதால் நடைபெறும் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:ஜெயக்குமாரின் உடல் தானா? டி.என்.ஏ. டெஸ்டுக்கு சென்ற மாதிரிகள்.. நீளும் மர்மம்..! - Tirunelveli Jayakumar Death Case

ABOUT THE AUTHOR

...view details