பெங்களூரு:17வது ஐபிஎல் கிரிக்கெட்டின் 30வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்ஸ் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஹைதராபாத் அணியின் சார்பில் டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் தொடக்கத்தில் களமிறங்கினர். இதில் வீசிய பந்துகளை எல்லாம், பவுன்டரிகளை நோக்கி தெறித்து ஓட வைத்தார், டிராவிஸ். பின்னர் வந்த யாஷ் தயாள், டாப்லேவின் பந்துவீச்சில் சிக்சர்களை பறக்க வைத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ட்ராவிஸ் ஹெட் வெறும் 20 பந்துகளில் அதிரடி அரை சதம் விளாசினார்.
பின்னர், 7.1 ஓவர்களில் 100 ரன்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எட்டியது. 108 ரன்களை எடுத்திருந்த நிலையில், டாப்லேவின் பந்துவீச்சில் அபிஷேக் சர்மா கெட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் நிதானமாக ஆடி ரன்களை குவித்தார். இதனிடையே, டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் (101) சதம் விளாசி அதிரடி பேட்டிங் செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இது ஐபிஎல் போட்டியில் இவர் அடித்த 4வது சதமாகும். மொத்தமாக இவர் மட்டும் 41 பந்துகளில் 9 பவுன்டரி, 8 சிக்சர் என 102 ரன்களை குவித்தார். ஆட்டத்தின் இறுதியில் பெங்களூருக்கு 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானத்தோடு களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிசும், விராட் கோலியும் பவர் - பிளேயானது முதல் 6 ஓவர்களில் 79 ரன்களை குவித்திருந்தனர். பின்னர், 20 பந்துகளில் 42 ரன்களை கோலி குவித்ததால், ஸ்கோர் 80 ஆகியது. அப்போது, இம்பேக்ட் பவுலரான மயங்க் மார்க்கண்டேயின் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகினார்.