கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 31வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோது வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக சால்ட் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கி விளையாடினர்.
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தனது அணிக்கு வெற்றியை பெற்று தந்த சால்ட் இப்போட்டியில் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வந்த ரகுவன்சி, நரைனுடன் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்தார்.
தொடக்கத்தில் ஆட்டத்தை சற்று தடுமாற்றத்துடன் தொடங்கிய நரைன் போக போக அதிரடி காட்ட தொடங்கினார். சிறப்பாக அணிக்கு ரன்களை சேர்த்து வந்த இந்த கூட்டணியை குல்தீப் சென் பிரித்தார். ரகுவன்சி அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 11, ரசல் 13, வெங்கடேஷ் ஐயர் 8 என ஆட்டமிழந்தாலும், சுனில் நரைன் சதம் அடித்த பின்னரே வெளியேறினார். இறுதியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்களும், சஹால் மற்றும் போல்ட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:"ஏப்.19ஆம் தேதி சரியான முடிவு எடுத்தால்.. ஜூன் 4ல் நமக்கு விடுதலை" - கமல்ஹாசன்! - LOK SABHA ELECTION 2024