சென்னை :இந்திய பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ், இண்டிகோ விமானத்தில் பயணித்த போது தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து தெரிவித்து உள்ளார். அண்மையில் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது தனது தனிப்பட்ட வீல்சேரை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்ட போது தனது கோரிக்கைக்கு பதிலளிக்காமல் விமான நிறுவன ஊழியர்கள் புறக்கணித்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், விமானத்தின் கதவு அருகே தனது தனிப்பட வீல்சேரை வைக்கும்படி பத்து முறைக்கும் மேல் தான் கோரிய போதும் அதை விமான நிறுவன ஊழியர்கள் காது கொடுத்தும் கேட்கவில்லை என்றும் தனது கோரிக்கையை விமான ஊழியர்கள் அலட்சியமாக புறக்கணித்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், ஒவ்வொரு முறையும் விமான பயணித்தின் போது இந்த கசப்பான அனுபவத்தை தான் எதிர்கொள்வதாகவும், 10ல் ஒன்பது முறை விமான பயணத்தின் போது தனது வீல்சேரை எடுத்து வருவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தான் தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குறிப்பிட்ட பயணத்திற்கு முன்னதாக தன்னை மூன்று மேலாளர்கள் வந்து சந்தித்ததாகவும், தங்களுக்கு என பிரத்யேக வீல்சேர் வழங்கும் கொள்கையை தாங்கள் கொண்டு இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் ஏன் அவர்கள் தனக்கு பயணத்தின் போது வழங்கவில்லை என தெரியாது என்றும் ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார்.