ஐதராபாத்:2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏலம் விரைவில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முக்கிய வீரர்கள், நீண்ட காலமாக ஒரே அணியில் இருக்கும் வீரர்கல் இந்த முறை அணி மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜாகீர் கான் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 14 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
மேலும் 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணிகளாக இருந்தவர்களில் ஜாகீர் கானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2011 உலக கோப்பையில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையும் படைத்தார். அவரது பங்களிப்பினுடன் இந்திய அணி கோப்பையை வென்றது.
தொடர்ந்து ஜஸ்டின் லாங்கர், ஜான்டி ரோட்ஸ், ஆடம் வோக்ஸ், லான்ஸ் குலுசனர் ஆகியோருடன் இணைந்து இந்திய அணியை வழிநடத்தி வந்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் இந்திய அணியில் கபீல் தேவுக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான பவுலராக காணப்பட்டார்.