தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்! - RAVICHANDRAN ASHWIN RETIRED

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச போட்டிகளில் இனி தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின் (X / @ashwinravi99)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். திடீரென இவர் ஓய்வை அறிவித்தததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அஸ்வினின் சாதனை மிக்க பாதையை பாராட்டி, "நன்றி அஸ்வின். திறமை, மாயாஜாலம், பிரகாசம் மற்றும் புதுமையின் ஒத்த சொல். சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் #TeamIndia அணிக்கு மிகவும் மதிப்புமிக்க ஆல்ரவுண்டர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். ஓர் அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துகள், @ashwinravi99," என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் விளங்குகிறார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த சிறிது நேரத்தில், 38 வயதான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 537 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், பட்டியலில் முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகளுக்கு அடுத்தபடியாக உள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த அஸ்வின், ஆட்டத்தின் முடிவில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். "இன்று சர்வதேச கிரிக்கெட் வீரராக எனக்கு கடைசி நாள்," என்று அஸ்வின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

விராட் கோலி, அஸ்வினை கட்டிப்பிடிக்கும் வீடியோ வைரலானதன் மூலம் அஸ்வினின் ஓய்வு குறித்த செய்தி பற்றிக்கொண்டது. இருவரும் தனிப்பட்ட உரையாடலை மேற்கொண்டு பின்னர் இதயத்தை வருடும் தருணத்தை பகிர்ந்து கொண்டனர். அஸ்வின் தனது ஆஸ்திரேலிய எதிரணி வீரர் நாதன் லியோனுடனும் சிறிது நேரம் செலவிட்டார்.

தற்போது ஐந்து போட்டிகள் அடங்கிய பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது போட்டியில் மட்டுமே இந்திய ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங் ஆடிய அவர், மொத்தம் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

2010-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், 106 டெஸ்டுகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 775 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின், 37 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் சர்வதேச டெஸ்டுகளில் ஏழாவது அதிக விக்கெட் எடுத்த வீரராக ஓய்வு பெறுகிறார். மேலும், அஸ்வினுக்கு அதிகபட்ச தொடர் ஆட்டநாயகன் விருதுகள் (11) இதுவரை கிடைத்துள்ளன. 66 போட்டிகளில் 350 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து வேகமாக விக்கெட் டேக்கராக சாதனை சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details