தமிழ்நாடு

tamil nadu

Asian Championship Trophy; அரையிறுதியில் தென்கொரிய ஹாக்கி அணியை எதிர்கொள்கிறது இந்தியா! - Asian Championship Trophy 2024

By ETV Bharat Sports Team

Published : Sep 15, 2024, 8:04 PM IST

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் தென்கொரிய அணியை இந்திய ஹாக்கி அணி நாளை எதிர்கொள்கிறது.

இந்திய - பாகிஸ்தான் வீரர்கள்
இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் (Credits - ANI)

சென்னை: 8வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அந்த வகையில், இந்திய அணி லீக் போட்டியில் சீனா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்புத் தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் ஐந்து வெற்றிகளைப் பெற்று, 15 புள்ளிகள் உடன் முதலிடம் பிடித்து இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி.

இதையும் படிங்க :ஒலிம்பிக்கில் நுழைவதே இலக்கு.. தென்தமிழக தங்க மங்கைகள் உணர்வுப்பூர்வ பகிர்வு! - South Asian Junior Athletics Games

இந்நிலையில், நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியா அணியை எதிர்கொள்கிறது இந்தியா. நடப்பு தொடரில் லீக் ஆட்டத்தில் தென் கொரியா அணியை இந்திய அணி வீழ்த்தி இருந்தது. இந்நிலையில், மீண்டும் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகின்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - சீனா அணிகள் மோதுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details