தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்தியா நம்பர் ஒன்! மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன்! - ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல்

Test Cricket Rankings: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதை அடுத்து உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 6:51 PM IST

Updated : Mar 23, 2024, 10:29 AM IST

துபாய்:இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் தொடரை 4-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி 122 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து அசத்தி உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து உள்ளது.

முன்னதாக சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டியிலும் முதலிடத்தைப் பிடித்து ஐசிசியின் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் முதலிடத்தைப் பிடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் 121 புள்ளிகளுடனும், டி20 கிரிக்கெட் அணிகள் தரவரிசை பட்டியலில் 266 புள்ளிகளுடனும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. அதேநேரம், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை எவ்வளவு நாள் தக்கவைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில் இந்திய அணி தனது அடுத்த டெஸ்ட் தொடரை வங்கதேசத்திற்கு எதிராக செப்டம்பர் மாதம் தான் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளால் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏற்படக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடம் பிடித்து உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 68.51 சதவீதத்துடன் முதல் இடத்தில் தொடர்கிறது. மேலும் இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி 60 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், 59.09 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றன. நியூசிலாந்து - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவு புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க :அதிகமுறை 5 விக்கெட்... 100வது டெஸ்ட்டில் அஸ்வின் புது மைல்கல்! வேறென்ன சாதனைகள் இருக்கு!

Last Updated : Mar 23, 2024, 10:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details