தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பலோன் டி ஓர் விருது என்றால் என்ன? கால்பந்தின் பைபிள் எனக் கூற காரணம் என்ன? விருது வாங்கியவருக்கு என்ன கிடைக்கும்?

கால்பந்து விளையாட்டில் உயரிய விருதாக கருதப்படும் பலோன் டி ஓர் விருதை வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Ballon D'or 2024 Award (AFP)

By ETV Bharat Sports Team

Published : Oct 28, 2024, 7:16 PM IST

ஐதராபாத்: சர்வதேச கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக பலோன் டி ஓர் விருது கருதப்படுகிறது. இந்நிலையில், 68வது பலோன் டி ஓர் விருது வழங்கும் விழா இன்று (அக்.28) திங்கள்கிழமை மாலை பாரீசில் உள்ள தியேட்டர் டு சாட்லெட் அரங்கில் வைத்து நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்த ஆண்டுக்கான பலோன் டி ஓர் விருதை பிரான்ஸ் கால்பந்தாட்ட கூட்டமைப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக கால்பந்து ஜாம்பவான்கள் லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்படாதது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கால்பந்தில் பரம போட்டியாளர்களாக வலம் வரும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை இந்த விருதை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளில் முதல் முறை:

இருப்பினும், இந்த ஆண்டுக்கான மதிப்புமிக்க விருதை வெல்ல லயோனல் மெஸ்ஸி அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரின் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு ரியல் மாட்ரிட் மற்றும் பிரேசில் கால்பந்து வீரர் விங்கர் வினிசியஸ் ஜூனியருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா கால்பந்து தொடர்களில் ரியல் மாட்ரிட் அணிக்காக விங்கர் வினிசியஸ் 26 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகளிர் பிரிவில் ஸ்பெயினை சேர்ந்த ஐதானா பொன்மேட்டி மற்றும் அலெக்ஸியா புட்டெல்லாஸ் ஆகியோர் பலோன் டி ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பலோன் டி ஓர் விருது:

கால்பந்து போட்டிகளுக்கு எந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதேபோல பலோன் டி ஓர் விருது வழங்கும் விழாவிற்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் இதழால் உருவாக்கப்பட்ட இந்த விருதானது கால்பந்து உலகில் மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது.

தற்போது, வரை கால்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை அதிக முறை வென்றவர்கள் என்ற பெருமையை கால்பந்து ஜாம்பவான்களான லயோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தன்னகத்தே வைத்துள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து பலோன் டி ஓர் விருதுக்கு இருவரும் பரிந்துரைக்கப்பட்டு வந்த நிலையில், 20 ஆண்டுகளில் முதல் முறையாக நடப்பாண்டில் இருவரது பெயரும் பரிந்துரையில் இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுவரை மெஸ்ஸி 8 முறையும், ரொனால்டோ 5 முறையும் பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது வாங்கியவருக்கு என்ன கிடைக்கும்:

பலோன் டி ஓர் விருது பெற்றவருக்கு என்று தனிப்பட்ட முறையில் பரிசுத் தொகை என்பது வழங்கப்படுவது இல்லை. மாறாக அணி ஒப்பந்தம் ஸ்பான்சர் உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் அவருக்கு தனியாக போனஸ் என்பது வழங்கப்படுகிறது. மேலும், விளையாட்டு சார்ந்த விருது விழாவில் வாழ்நாள் முழுவதும் கலந்து கொள்ள ஏதுவாக பாஸ் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த பலோன் டி ஓர் விருதை தயாரிக்க இந்திய மதிப்பில் 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஏறத்தாழ 6 மாதம் காலம் அல்லது 100 மணி நேரம் வரை ஒரு பலோன் டி ஓர் விருதை தயாரிக்க நேரம் செலவழிக்கப்படுகிறது. இதனாலேயே இந்த விருதுக்கு என தனியாக மவுசு அதிகரித்து காணப்படுகிறது.

இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் யாரார்? அணிகளின் நிலை என்ன? யாராருக்கு அதிக வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details