தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

90’s கிட்ஸ்களின் பேவரைட் WWE வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - WWE WRESTLERS SALARY

WWE Players Salary: டபிள்யு டபிள்யு இ (WWE) மல்யுத்த வீரர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
Representational Image (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 29, 2024, 2:19 PM IST

ஐதராபாத்:உலக மல்யுத்த போட்டிகளில் அதிக பார்வையாளர்களை கொண்டதாக டபிள்யு டபிள்யு இ (WWE) மல்யுத்த விளையாட்டு தொடர் உள்ளது. என்ன தான் அமெரிக்காவில் இந்த போட்டி நடைபெற்றாலும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

WWE விளையாட்டில் பிராக் லெஸ்னர் (Brock Lesnar) தி அண்டர் டக்கர் (The UnderTaker), கேன் (Kane), ஹல்க் கோகன் (Hulk Hogan), ஜான் சீனா (John Cena), ரிக் பிளைர் (Ric Flair), ஷான் மைக்கெல்ஸ் (Shaun Michaels), ரோமன் ரீஜின்ஸ் (Roman Reigns) என பல மல்யுத்த வீரர்கள் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமானவர்களாக உள்ளனர்.

ஒரு புறம் WWE விளையாட்டு முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என குற்றஞ்சாட்டப்பட்டாலும், ரசிகர்களிடம் அதற்கான மவுசு என்பது சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான் செல்கிறது. முற்றிலும் தொழில் முறை விளையாட்டான WWE போட்டியில் வீரர்களின் பிரபலத்திற்கு ஏற்ப ஊதியமானது வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அப்படி WWE வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். Brock Lesnar தான் WWE விளையாட்டில் அதிக சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் Vince McMahon தொடர்ந்த பாலியல் வழக்கு காரணமாக WWE அமைப்பு பிராக் லெஸ்னருடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும், அவர் தான் அதிக சம்பளம் வாங்குவதாகவும் அவருக்கு அடுத்தபடியாக ஜான் சீனா, ரோமன் ரீஜின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் அதிக தொகை ஊதியம் பெறும் நபர்கள் எனக் கூறப்படுகிறது. தொகை வாரியாக அதிக சம்பளம் பெறும் WWE வீரர்களின் பெயர்களை இங்கு காணலாம்.

  • பிராக் லெஸ்னர் ஆண்டுக்கு 12 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியம் பெறுவதாக சொல்லப்படுகிறது.
  • Roman Reigns: 5 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Randy Orton: 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Triple H: 3.6 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • AJ Styles: 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Becky Lynch: 3 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Seth Rollins: 3 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • The Undertaker: 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • The Miz: 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Stephanie McMahon: 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Kevin Owens: 2 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Braun Strowman: 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Sheamus: 1 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Drew McIntyre: 1 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Bobby Lashley: 1 மில்லியன் அமெரிக்க டாலர்,
  • Jinder Mahal: 9 லட்சம் அமெரிக்க டாலர்,
  • Kane: 9 லட்சம் அமெரிக்க டாலர்,
  • Charlotte Flair: 6 லட்சம் அமெரிக்க டாலர்,
  • Sasha Banks: 5 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்,
  • Bianca Belair: 5 லட்சம் அமெரிக்க டாலர்,
  • Alexa Bliss: 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்,
  • Asuka: 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்,
  • Liv Morgan: 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்.

இதையும் படிங்க:விராட் கோலியின் கடைசி டெஸ்ட்! ஸ்டுவர்ட் பிராட் அதிர்ச்சி தகவல்! - Virat Kohli test Retirement

ABOUT THE AUTHOR

...view details