ஹைதராபாத்:இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி, 28 மற்றும் 30ஆம் தேதிகளில் பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல், ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்பு சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியை பிசிசிஐ கடந்த வியாழன் அன்று அறிவித்தது. இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியான நிலையில், இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்த அணியை பிசிசிஐ அறிவித்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணி சமீபத்தில் விளையாடிய ஜிம்பாப்வே உடனான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இலங்கை சுற்றுப் பயணத்தில் வாய்ப்பு வழங்காதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மேலும், ரிங்கு சிங்கையும் ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றன.
இதற்கு மத்தியில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகையில், “இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் எந்த வித காரணங்களுக்காக இந்த அணியில் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், ருதுராஜ் இந்திய அணிக்கு அவர் இடம் பெற்ற அனைத்துப் போட்டிகளிலுமே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.