தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெங்களூரு அணியை விற்பனை செய்ய திட்டம்? மகேஷ் பூபதியின் பதிவால் பரபரப்பு! என்ன நடந்தது? - RCB For sale - RCB FOR SALE

பெங்களூரு அணியை புதிய உரிமையாளரிடம் விற்பது சிறந்தது என தான் நினைப்பதாக பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். விளையாட்டுக்காகவும், ஐபிஎல் தொடருக்காவும், ரசிகர்களுக்காகவும், ஏன் அணி வீரர்களுக்காகவும் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுப்பது நல்லது என மகேஷ் பூபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 1:24 PM IST

ஐதராபாத் :நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நேற்று (ஏப்.15) சொந்த மண்ணில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் ஐபிஎல் சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஐதரபாத் அணி 287 ரன்கள் குவித்து புது வரலாற்று சாதனையை படைத்தது.

லாக்கி பெர்குசன், ரிஸ்ஸி டோப்ளே உள்ளிட்ட எலைட் பந்துவீச்சாளர்கள் இருந்த போதிலும் உள்ளூரில் ஐதராபாத் அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த முடியாமல் போனது பெங்களூரு அணிக்கு துரதிர்ஷ்ட வசமானது தான். தொடர்ந்து 2வது இன்னிங்சில் மிகப் பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய போதிலும் பெங்களூரு அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாதது அணி தோல்வி நிலையை அடைய நேரிட்டது.

வெற்றிக்காக விராட் கோலி (42 ரன்), கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் (62 ரன்) ஆகியோர் போராடிய போதும் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய வில் ஜேக்ஸ் (7 ரன்), ரஜத் படிதார் (9 ரன்), சவுரவ் சஹான் (டக் அவுட்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இருப்பினும் ஒற்றை ஆளாக அசூர ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக்கிற்கு (83 ரன் 35 பந்து) போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் 287 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய போது, வெறும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பெங்களூரு அணிக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். அதேபோல் வெற்றிக்காக் கடைசி வரை பெங்களூரு அணி வீரர்களின் எடுத்த முயற்சி உள்ளூர் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

இந்நிலையில், தான் பெங்களூரு அணியை புதிய உரிமையாளருக்கு விற்பனை செய்வது நல்ல முடிவு என பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள பதிவில், "விளையாட்டின் நலனுக்காகவும், ஐபிஎல் தொடருக்காகவும், ரசிகர்களுக்காகவும், ஏன் வீரர்களுக்காகவும் ஆர்சிபி அணியை புதிய உரிமையாளர்களிடம் விற்க போதிய நடவடிக்கைகளை பிசிசிஐ எடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

மற்ற அணிகள் விளையாட்டு வீரர்களுக்காகவும் அணியை வழிநடத்திச் செல்ல மேற்கொள்ளும் நடவடிக்கைகளை புதிய உரிமையாளர்கள் செய்வார்கள் என நினைக்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க :பதஞ்சலி விளம்பர வழக்கு: "நிபந்தனையற்ற... பொது மன்னிப்பு கோருகிறோம்" - ராம்தேவ், பாலகிருஷ்ணா! - Patanjali Advertisement Case

ABOUT THE AUTHOR

...view details