ஐதராபாத் :17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், காயம் கரணமாக சென்னை அணியின் தொடக்க வீரர் டிவோன் கான்வே முதல் பாதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டிவோன் கான்வே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரனா டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.
விரைவில் அவர் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளதாகவும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மற்றும் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதி ஆட்டங்களில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து எடுக்கப்பட்ட ஸ்கேன் மற்றும் மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகளை தொடர்ந்து இந்த வார இறுதியில் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காயம் குணமடைய ஏறத்தாழ 8 வாரங்கள் வரை ஆகும் எனக் கூறப்படும் நிலையில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் பாதி ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் டிவோன் கான்வே, தற்போது இல்லாதது அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இரண்டாவது பாதி ஆட்டங்களில் அவர் கலந்து கொண்டு விளையாடுவார் எனக் கூறப்பட்டு உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூன்று நாட்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில் டிவோன் கான்வேயை இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருந்து பயிற்சி மேற்கொள்ளுமாறு அணி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்த டிவோன் கான்வே சென்னை சூப்பர் அணியில் கடந்த 2 சீசன்களாக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்ல மிகவும் உறுதுணையாக இருந்த கான்வே, தொடர் முழுவதும் 672 ரன்கள் குவித்தார். டிவோன் கான்வே அணிக்கு திரும்பினாலும் பிளே ஆப் சுற்றில் மட்டுமே விளையாட முடியும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :சன்ரைசஸ் ஐதராபாத் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்! எய்டன் மார்க்ராம் நீக்கம்! பின்னணி என்ன?