ஐதராபாத்: 9வது மகளிர் டி20 உலக கோப்பை (Womens T20 World Cup) கிரிக்கெட் தொடர் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. முதலாவது ஆட்டத்தில் சார்ஜா மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு வங்கதேசம் - ஸ்காட்லாந்து மகளிர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
முன்னதாக வங்கதேசத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றபட்டது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய மணி களமிறங்குகிறது.
மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோத் உள்ள நிலையில், அதில் ஒவ்வொரு பிரிவிலும் முன்னிலை பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் காண உள்ளன. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்த அட்டவணையை காணலாம்.
இந்தியா அட்டவணை:
- இந்தியா vs நியூசிலாந்து: அக்டோபர் 4, இரவு 7:30 மணி,
- இந்தியா vs பாகிஸ்தான்: அக்டோபர் 6, மாலை 3:30,
- இந்தியா vs இலங்கை: அக்டோபர் 9, இரவு 7:30,
- இந்தியா vs ஆஸ்திரேலியா: அக்டோபர் 13, இரவு 7:30 மணி.
இந்திய மகளிர் அணி ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.