தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ICC Champions Trophy 2025: தந்தை மரணம்.. போட்டிக்கு முன்பே இந்திய அணிக்கு பெரும் அடி! வீடு திரும்பிய பயிற்சியாளர்! - CHAMPIONS TROPHY INDIA

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் முதல் போட்டிக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தனது தந்தை இறப்பின் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்பினார்.

பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர்
பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் (Credit - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2025, 2:10 PM IST

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்றுள்ள இந்திய அணி துபாயில் முகாமிட்டுள்ளது. பாகிஸ்தானில் நாளை (பிப்.19) தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன. இரண்டாவது போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இதற்காக துபாய் சென்றுள்ள இந்திய அணி வலை பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தனது தந்தை இறப்பின் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுவிட்டதாக தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மோர்கெல் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் திங்கட்கிழமை அன்று திடீரென அவரது தந்தையின் இறப்பு செய்தியை கேட்டு துபாயில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டாவது நாள் பயிற்சியில் மோர்னே மோர்கெல் இடம்பெறவில்லை. மீண்டும் அவர் துபாய்க்கு திரும்புவரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏற்கனவே நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும், அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சு பிரிவில் ஷமியின் பங்களிப்பு வலு சேர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்பாக உள்ளது. இந்த சூழலில், அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தனது வீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாக சென்றிருப்பது மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆடுவாரா ரிஷப் பந்த்? சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே காயம்... வலியால் துடித்த வீடியோ... ரசிகர்கள் கலக்கம்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தனது முதல் போட்டியை வரும் வியாழக்கிழமை வங்கதேசத்துடன் எதிர்கொள்கிறது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாடி சொற்ப ரன்களில் வீழ்த்தி இருந்தாலும் வரும் போட்டியில் பந்து வீச்சில் இந்தியா ஜொலிக்க வேண்டும்.

இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தந்தை இறப்பின் காரணமாக சொந்த நாட்டுக்கு சென்றிருப்பது அணிக்கு கலக்கத்தை கொடுத்திருக்கலாம். அதேபோல, அண்மையில் அணியின் முக்கிய ஆட்டக்காரரும், விக்கட் கீப்பருமான ரிஷப் பந்த் பயிற்சியின்போது முழங்கால் காயமுற்று நொண்டியபடி செல்லும் வீடியோ வைரலானது. அதனால், அவர் முதல் போட்டியில் பங்கேற்பாரா? எனவும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details