மும்பை:17ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இதனையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்தியா அணிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய அவருடைய சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறியதாவது, "ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றிருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய குரு தரிசனம்" எனத் தெரிவித்துள்ளார்.
'ஏழையால் எந்த எல்லையையும் எட்ட முடியும் என்பதற்கு ரோஹித் சர்மாவே உதாரணம்:மேலும் "ஒரு ஏழைக்குழந்தை விளையாட்டில் கவனம் செலுத்தினால் எந்த எல்லைக்கும் செல்ல முடியும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ரோஹித் ஷர்மா" என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "தற்போது நான் (தினேஷ் லாட்) உலகின் மிகப் பெரிய பணக்காரன் போல் உணர்கிறேன். மேலும், மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் அறியப்பட்ட பெயராக வலம் வருகிறேன்.