ஐதராபாத்:கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் சில சாதனைகள் சக வீரர்களாலும், அல்லது அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறை வீரர்களாலும் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில சாதனைகள் மட்டும் யவராலும் முறியடிக்க முடியாமல் இன்னும் அந்த சாதனையை படைத்தவரின் பெயர் தாங்கி நின்று பெருமைப்படுத்துகிறது.
அப்படி நிகழ்த்தப்பட்ட சாதனை குறித்து இந்த செய்தியில் காணலாம். ஒரு பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்ட சாதனை குறித்து தான் இந்த சாதனை துளியில் நாம் பார்க்கப் போகிறோம். பவுண்டரியோ, சிக்சரோ அடிக்காமல் ஒரு பந்தில் 286 ரன்கள் எடுப்பது எப்படி சாத்தியம் என்பது குறித்து அனைவருக்கும் கேள்விகள் எழலாம்.
கவுண்டி போட்டியில் சாதனை:
கடந்த 1894ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தான் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பன்பரி மைதானத்தில் 1894ஆம் ஆண்டு நடைபெற்ற Victoria - மேற்கு ஆஸ்திரேலியாவின் Scratch லெவன் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் விக்டோரியா அணி பேட்ஸ்மேன் அடித்த பந்து அருகில் இருந்த மரத்தின் உச்சியில் சிக்கிக் கொண்டது.
மரத்தில் சிக்கிக் கொண்ட பந்தை எடுக்க பீல்டிங் அணி வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் எளிதில் எதுவும் நடக்கவில்லை. பொதுவாக கிரிக்கெட்டில் பந்து காணாமல் போனால் மட்டுமே அந்த போட்டி நடுவரால் அறிவிக்கப்பட்டு ஆடுகளத்தில் வீரர்கள் ரன் ஓடுவது தடுத்து நிறுத்தப்படும்.