மேஷம்:இந்த வாரம் சுவாரஸ்யமான, கலவையான பலன்களைக் கொண்டு வரும். பணிச்சுமை எதிர்பாராத விதமாக அதிகரிக்கக்கூடும். பெண்களுக்கு சில பிரச்சனைகள் எற்படலாம். வியாபாரம் செய்பவர்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். சீரான தினசரி உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உணவை சரியாக உட்கொள்வது மிக முக்கியம். வணிகத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டவர்கள் சில தடைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை புறக்கணிக்காமல் இருப்பதும் மிக முக்கியம். உங்கள் முடிவுகள் மற்றும் செயல்களில் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருப்பது அவசியம்.
ரிஷபம்: வியாபரத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகள் என இரண்டையும் சந்திக்க நேரிடும். எதிர்பாராத விதமாக உத்யோக நிமித்தமாக தொலை தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அலுவலத்துக்கும் வீட்டிற்கும் இடையேயான தூரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஊழியர்கள் சகாக்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும். பயணத்தின் போது உடைமைகள் மற்றும் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளவது முக்கியம். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் விடாமுயற்சியின் மூலம் வெற்றி பெறுவார்கள். காதலில் ஏற்படும் மோதல்களை ஒரு தோழியின் உதவியுடன் தீர்க்க முடியும். கை
மிதுனம்:அதிகாரம் மற்றும் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து சிறந்த ஆதரவை எதிர்பார்க்கலாம். உங்களைப் பார்த்து பொறாமைப்படும் சக ஊழியர்கள் உங்களைச் சுற்றி இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சொத்து மற்றும் கட்டமைப்புகள் தொடர்பான சிக்கல்கள் சுமுகமாக தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. நிதி முதலீடுகளளில் நம்பகமான நபர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுங்கள். உங்கள் காதல் துணையுடன் நேரத்தை செலவழிக்கும் வாய்ப்புள்ளது. இல் வாழ்க்கை மன நிம்மதியைத் தரும் வகையில் இருக்கும்.
கடகம்:பணத்தை எந்தவொரு முதலீடுகளில் வைப்பதைத் தவிர்க்கவும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை பற்றிய உங்கள் கனவு நனவாகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். சொத்துக்களை வாங்கி விற்பதன் மூலம் லாபம் ஈட்டலாம். வெளிநாட்டில் தொழில் அல்லது வியாபாரம் துவங்குவது குறித்து சில சவால்களை எதிர்கொள்ள நேரலாம். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் விருந்துக்கு வாய்ப்புள்ளது. காதல் உறவுகள் வலுவாக இருக்கும். இல் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.
சிம்மம்:உடல் நலம் மற்றும் உறவுகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உடல்நலம் உங்கள் தொழில்முறை செயல்திறனை நேரடியாக பாதிக்கும். பிழை சிறியதாக இருந்தாலும் கெட்ட பெயரை ஏற்படுத்தலாம். எதிரிகளிடம் கவனமாக இருப்பது முக்கியம். சொத்து மற்றும் கட்டுமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிகளில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காதல் உறவுகளில், கவனமாக சிந்தித்து, காதல் துணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் கண்மூடித்தனமாக செயல்படுவது அல்லது தேவையில்லாத விஷயங்களில் அதிகமாக தலையிடுவது உங்கள் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
கன்னி: வியாபார முயற்சிகளுக்கும் சாதகமான நிலை ஏற்படும். தொழிலில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் பெரிய முதலாளியிடமிருந்து லாபம் அளிக்கும் பதவியைப் பெறலாம். வியாபாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உங்கள் கனவு நனவாகும். வீட்டிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஆடம்பரமான பொருளை வாங்கலாம். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். காதல் உறவுகள் பலமாக வளரும். வாழ்க்கைத் துணையுடன் ஆனந்தமான தருணங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.