மேஷம்: இந்த வாரம் சற்று சுவாரஸ்யமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பும் வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். காதல் உறவில் தவறான புரிதல் காரணமாக சில சச்சரவுகள் ஏற்படலாம். உங்களின் திருமண வாழ்க்கையிலும், ஏதோ ஒரு பிரச்னை குறித்து வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
மாணவர்கள் மனதை அங்கும் இங்கும் அலையவிடாமல் படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். மாணவர்களின் உயர்கல்விக்கு உகந்த நேரம் இது. உங்கள் நிதி நிலை செழிப்பாக இருக்கும். செலவுகள் எப்போதும் போல் அதிகமாகவே இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஏதேனும் நிலம் அல்லது வீடு வாங்க விரும்பினால், இந்த வாரம் அதற்கான சரியான நேரம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீட்டில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தாயார் உங்களுடன் வந்து வசிப்பார்.
ரிஷபம்: பொருளாதார நிலை இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுவதற்கான நேரம் இப்போது சரியில்லை. நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், வேறு ஒருவருடைய உதவியினால், வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும். ஆனால், ஒரு மூன்றாம் நபரின் தலையீட்டினால், உங்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். போட்டிக்குத் தயாராகும் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். வானிலை மாற்றத்தால் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், உடல்நலம் முன்பைவிட சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் கல்விக்காக தெரிந்தவர்களிடம் பேசுவீர்கள். பிள்ளைகளிடம் இருந்து சுப செய்திகள் வந்துசேரும். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள்.
மிதுனம்:இந்த வாரம் காதலர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். எண்ணங்களை காதல் துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். கல்யாணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு வரன் கிடைக்கும். திருமணமானவர்கள், தங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புள்ளது.
இது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படும். புதிய தொடர்புகளும் கிடைக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். வீட்டை பழுதுப் பார்க்க நிறைய பணம் செலவழிப்பீர்கள். நிலம் வாங்க விரும்பினால், இந்த நேரத்தில் அதை வாங்கலாம். பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாம். ஆரோக்கியம் முன்பைவிட நன்கு மேம்படும். ஆசிரியர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். மாணவர்கள் மனதை அங்கும் இங்கும் அலைய விடும் காரணத்தால், கவனச்சிதறல்கள் ஏற்படும். அதனால், படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும்.
கடகம்:இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்கள், அவர்களது வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பழைய மனக்கசப்புகளை மறந்து வாழ்வில் முன்னேறுவார்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு அவர்களின் மனம் கவர்ந்தவரே வாழ்க்கைத் துணையாகக் கிடைப்பார். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். நேரத்தை வீணடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
நிதிநிலைமை செழிப்பாக இருக்கும். விரயம் ஏற்பட்டாலும் அவை அனைத்துமே சுப செலவுகள்தான். ஆகவே, அதை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சில புனித தலங்களுக்கு யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். பயணம் செல்வது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். உங்களின் அரசாங்க பணிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதுவும் செய்து முடிக்கப்படும்.
சிம்மம்:நீங்கள் உங்கள் உறவில் அன்பையும், நல்லிணக்கத்தையும் பராமரிக்க முயற்சிக்க வேண்டும். காதல் உறவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருவருமே ஒருவருக்கொருவர், உங்களுடைய நேரத்தை செலவழிப்பது மிகவும் நல்லது. ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் பணிபுரியும் வாய்ப்பு வரும். ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். இந்த வாரம் உங்களுக்கென ஒரு புதிய வாகனத்தை வாங்கும் வாய்ப்புள்ளது.
பங்கு சந்தையில் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால், உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, கடினமான உழைப்பு மற்றும் போராட்டம் நிறைந்த வாரமாக இருக்கும் என்ற போதிலும், உங்களின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கலாம். வியாபாரம் செய்பவர் எனில், உங்களுக்கு திடீரென ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கலாம். அதில் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.
கன்னி:நல்ல செய்திகள் வந்து சேரும் வாரம் இது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். சில புதிய ஆராய்ச்சிகள் பற்றி நீங்கள் சிந்திக்கக்கூடும். வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர் எனில், வியாபாரத்தை மேம்மடுத்த வீட்டை விட்டு வெளியூர் செல்லலாம்.
இதனால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், உங்கள் நிதி நிலைமை உறுதியாகும். உங்கள் ஆரோக்கியம் முன்பைவிட நன்றாக இருக்கும். அதேசமயத்தில், உங்களுடைய வழக்கமான பரிசோதனைகளை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டால், அது மேலும் சிறப்பாக இருக்கும். நிதிநிலைமை நன்றாக இருக்கும். வீட்டை பழுதுபார்ப்பதற்காக நீங்கள் நிறைய பணம் செலவழிப்பீர்கள். எங்காவது முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் எனில், முதலீடுகளை நீண்ட காலத்திற்கு செய்தால், அது உங்களுக்கு நல்லது. உங்கள் குழந்தைகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
துலாம்: இந்த வாரம் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். அவர்களுடன் எங்காவது ஒரு சுற்றுலா பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். அங்கு அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள். இல்லறத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டால் சண்டையும், சச்சரவுகளும் ஏற்படலாம். காதல் வாழ்க்கையிலும் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆசிரியர்கள் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். மாணவர்கள் எந்தவொரு புதிய பாடத்திலும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள்.
உங்களுடைய நிதி நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர் எனில், வியாபாரத்தில் முன்பு தடைபட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கி செயல்படுத்துவீர்கள். அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அவர்களின் பழைய வேலையிலும் புதியவற்றைக் கற்றுக்கொள்வார்கள். நிலம் அல்லது வீடுமனை போன்ற சொத்துக்களில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் நேரம் நன்றாக உள்ளது.
விருச்சிகம்: இந்த வாரம் முன்பைவிட மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு, அவரின் மனதைக் கவர்ந்தவரே வாழ்க்கைத் துணையாகக் கிடைப்பார். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கைத்துணை அவருடைய தொழிலில் வெற்றி பெறுவார். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஏதாவது வீடுமனை அல்லது நிலம் போன்ற சொத்துக்களை வாங்க விரும்பினால், இது அதற்கான உகந்த நேரம். வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்களுக்கு சில நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்த வாரம் ஏற்றது. வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். அரசாங்க பணிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதுவும் முடிக்கப்படும். புதிய வேலைவாய்ப்பும் வரும். மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும். உடல்நலம் முன்பைவிட சிறப்பாக இருக்கும். ஆனால், மாறிவரும் வானிலை காரணமாக, ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.
தனுசு:இந்த வாரம் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையிடமிருந்து நல்ல பரிசைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒரு புதிய விருந்தினராக குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு நல்ல உறவு வந்து சேரும். இந்த வாரம் அனாவசியமாக அதிகமாக பணத்தை செலவிடலாம். பங்குச் சந்தையில் அதிக பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
நிதிநிலை நன்றாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்பு நிறைந்ததாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது வேலையை மாற்றுவதற்கான உகந்த நேரம் அல்ல. ஆர்ட், டிசைனிங், மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் மனதை அங்கும் இங்கும் அலைய விடுவதால், படிப்பில் கவனம் செலுத்துவது குறையும். மாணவர்களின் உயர்கல்விக்கு உகந்த நேரம். அவர்கள் விரும்பிய பாடத்தையே படிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்: இந்த வாரம் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசலாம். வெளிநாட்டிலிருந்து புதிய தொடர்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக எடுக்கு முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புதிய வேலையைத் தேட விரும்பினால், இதுதான் அதற்கான சரியான நேரம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு ரொமாண்டிக் டின்னருக்குச் செல்லலாம், அல்லது அவருடன் அன்பாக உரையாடுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், நன்கு ஆலோசித்து முதலீடு செய்யுங்கள். கடன் வாங்குவதற்கும், கொடுப்பதற்கும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் ஏதாவது ஒரு போட்டியில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்களே ஒரு புதிய வாகனம் வாங்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் பற்றி பேச்செடுக்கலாம்.
கும்பம்: இந்த வாரம் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கப் போகிறது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் இல்லறத்தில் ஈகோவை கொஞ்சம் கூட அனுமதிக்காதீர்கள், அது தலையிட்டது என்றால் உறவில் சற்று பிரச்னைகள் ஏற்படலாம். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இது ஆன்லைன் வருமானத்திற்கான ஆதாரமாகவும் மாறும். உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை மத சம்பந்தமான விஷயங்களுக்காகவும் செலவிடுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் புத்திசாலித்தனமாக யோசித்து முதலீடு செய்யுங்கள்.
உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், உங்கள் பழைய வேலையிலேயே சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீட்டில் பூஜை, பஜனை, கீர்த்தனை போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் வாழ்க்கைத் துணையை ஒரு புதிய வேலைக்கு செல்லும்படி நீங்கள் அறிவுறுத்தலாம். பிள்ளைகளின் பொறுப்புகள் நிறைவேறும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். பட்ஜெட் போட்டு அனைத்து செலவுகளையும் செய்வது நல்லது.
மீனம்: இந்த வாரம் முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் சற்று நேரத்தை செலவிடுவீர்கள். அனைவரும் சேர்ந்து ஏதாவது ஒரு புனித தலத்திற்கு யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். வெளியிலும், கண்ட இடங்களில் சாப்பிடுவதையும், குடிப்பதையும் தவிர்க்கவும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். உயர்கல்விக்கு நேரம் நன்றாக உள்ளது. வீட்டை விட்டு வெளியே வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பத்தை பிரிந்து வாழநேரிடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல உறவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வீட்டைப் பழுதுபார்ப்பதற்கும் நீங்கள் நிறைய பணம் செலவிடுவீர்கள். உங்கள் நேரத்தின் ஒருபகுதியை மத சம்பந்தமான விஷயங்களுக்காகவும் செலவிடுவீர்கள். இது உங்கள் மனதில் அமைதியைத் தரும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்வார்கள்.