மேஷம்: பணிகளை சரியான கால கட்டத்தில் குறிப்பிட்ட சமயத்தில் முடிவடையும் போது வெற்றிகளைக் காண்பீர்கள். தொழில் வாழ்க்கை மற்றும் வியாபாரம் இரண்டிலும் இலக்குகளை அடைய வாய்ப்புகள் இருக்கும். உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவார்கள். பண விவகாரங்களில் கவனமாக இருப்பது முக்கியம்.
வியாபாரம் செய்பவர்கள் கைக்கு வரும் எந்த ஒரு வாய்ப்பிலும் புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருப்பார். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான நேரத்திற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் காதல் உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ரிஷபம்:எந்தவித தொந்தரவும் இல்லாமல் தொழில்முறை முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காதல் துணையுடனான அன்பு மேலும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தி சாதனைகளை ஒப்புக்கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். ஜாதக ரீதியாக அனைத்தும் மிகவும் சாதகமாக இணைந்து வருவதால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வாரத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மிதுனம்: உங்களை நோக்கி வரும் பல்வேறு சவால்களை சமாளிப்பதில் வெற்றி காண வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் உள்ள அன்புக்குரியவர்களின் உதவியால், தொழில் வாழ்க்கை, வியாபாரம் மற்றும் தனிப்பட்ட லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உள்ள வயதான குடும்ப உறுப்பினரின் உடல் நலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம்.
காதல் உறவு மேலும் வளரும். காதல் துணையிடம் இருந்து ஒரு எதிர்பாராத பரிசைப் பெறலாம். உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையிலான அன்பும், அரவணைப்பும் வலுவாக வளரும். உங்கள் குழந்தைகளைப் பற்றிய நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இது உங்கள் நற்பெயரை மேலும் உயர்த்தும். நலம் விரும்பிகளின் ஆதரவுடன், நீண்டகால திட்டங்கள் இறுதியாக நிறைவேறக்கூடும்.
கடகம்: சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளிவிட்டு உங்களின் லட்சியத்தை பற்றி உணர்ந்து அதை நோக்கி முன்னேறிச் செல்லவும். குடும்பத்துடனான உங்களின் அன்பு பிணைப்பு வலுப்படும். காதல் உறவில் சிக்கல்கள் இருந்தால் பெண் தோழி உங்களுக்கு உதவுவார்கள். உங்களுக்கும், உங்கள் காதல் துணைக்கும் இடையிலான அன்பு பிணைப்பை வலுப்படுத்தும். சுவாரஸ்யமான செயல்களில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பருவகால நோய்களால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும். உறவுகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பது முக்கியம்.
சிம்மம்:தொழில் வாழ்க்கை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் லாபமளிப்பதாக இருக்கும். மனம் கவர்ந்தவருடன் ஏதேனும் சிக்கல்கள் அல்லது தவறான புரிதல்கள் இருந்தால் அவை சரியாகிவிடும். காதல் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அனுபவிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் உங்கள் கையில் வரும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துவது முக்கியம். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாறிவரும் பருவங்கள் உடல் அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
காதல் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த நேரம். காதல் துணையுடனான உங்கள் உறவு வலுவாக வளரும் இல்வாழ்க்கையில் நேர்மறையான எண்ண அதிர்வு இருக்கும். முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் உங்களுக்கு நிறைய அதிருஷ்டங்கள், ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உடல் நலத்தையும் கவனித்துக்கொள்வது மிக முக்கியம். ஆரோக்கியத்தை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
கன்னி:உங்கள் போட்டியாளர்கள், உங்களின் லட்சியத்திலிருந்து உங்களை திசை திருப்ப முயற்சிப்பார்கள். அனுபவமிக்க நபர் அல்லது வயதில் மூத்தவரிடம் வழிகாட்டுதலைப் பெறுவது அவசியம். திருமண உறவுகள் செழிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
உடல் நலனில் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியம். சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் தியானத்தை அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். வணிகத் துறையைச் சேர்ந்த தனிநபர்கள், தங்கள் துறையில் மிகவும் திறமையான நபர்களிடமிருந்து சவால்களை சந்திக்க நேரிடும்.
துலாம் : பணியிடத்தில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவது, தொழில் நோக்கங்களை முன்னேற்றுவதற்கு வழிவகுக்கும். பயணத்தை மேற்கொள்வதற்கு முன் உடல்நலம் மற்றும் உங்கள் உடைமைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். காதலில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது அவசியம். காதல் உறவுகளைப் பேண ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசுவது கை கொடுக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியருடன் இணைந்து பணிபுரிவது நல்லது. நேர்மை மற்றும் நற்பெயரைக் காக்க கடினமாக உழைக்க வேண்டும். விடாமுயற்சியுடன் பணியாற்றி நீங்கள் விரும்பிய லட்சியங்களை அடைவதும் முக்கியம்.
விருச்சிகம்:உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அல்லது இடமாற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முதலீடுகள் மூலம் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. திருமணத்தில் மனநிறைவின் காலமாக இருக்கலாம். ஆரோக்கியம் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபாரத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிக்கான பாதையாக அமையும். இலக்குகளில் கவனம் செலுத்துவது, உங்கள் தொழில்முறை முயற்சிகளுக்கு வழிவகுக்கும்.
தனுசு: உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. உங்கள் நல்வாழ்வை மேம்படுத்த, நிலையான உடல் செயல்பாடு மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெகுமதிகளைப் பெறுவார்கள். காதல் விஷயங்களுக்கு மிகவும் சாதகமானது. காதல் துணை உங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு அன்பையும், ஆதரவை வழங்குவார்கள். இல்லத்தரசிகள் ஆன்மீக பயிற்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவார்கள். பொறுப்புகளை நிறைவேற்ற உங்கள் நேரத்தையும், சக்தியையும் ஒருமுகப்படுத்துவதும் அவசியம். உடல்நலம் மற்றும் உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்:உங்கள் விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பு ஆகியவை உங்கள் தொழிலில் அங்கீகரிக்கப்படும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் இருவரும் நீங்கள் செயலாற்றிய விதத்தைப் பாராட்டுவார்கள். நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட உள்ளன. மேலும் உங்கள் செல்வம் வளரும். காதல் உறவுகள் பலப்படும். உங்கள் குடும்பத்தினர் உங்கள் காதலை ஆதரிக்கலாம்.
உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் விடுமுறையை அனுபவிக்கும் வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டமான வாரமாக இருக்க வாய்ப்புள்ளது. அன்புக்குரியவருடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புள்ளது. சீரான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வது உங்கள் நல்வாழ்வுக்கு அவசியம்.
கும்பம்:உற்றார் உறவினர்களின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு இருக்கும் மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவாளர்களின் ஆலோசனையைக் கவனிப்பது முக்கியம். தொழில் வாழ்க்கை சாதகமாக இருக்கும். காதல் உறவுகளில் பிணைப்பும், நெருக்கமும் பலப்பட்டு இல்வாழ்க்கைக்கான மகிழ்ச்சியை உறுதி செய்யும். உங்கள் உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். சிறிய உடல்நலப் பிரச்சினைகளை கவனத்தில் கொள்வது நல்வாழ்வைப் பராமரிக்க உதவும்.
மீனம்:காதல் உறவுகளுக்கான சூழலும் தயாராகி வருகிறது. தைரியமாக உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். இது உங்கள் காதல் வாழ்க்கையில் நேர்மறையான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். உங்கள் திருமண வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். குடும்ப பிணைப்புகள் வலுவடையும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது. ஆன்மீகம் மற்றும் சமூக காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணங்கள் மத மற்றும் ஆன்மீக முயற்சிகளை நோக்கி ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது.