மேஷம்: குழந்தைகளுக்காக கடுமையாக உழைப்பீர்கள். நெடுநாளாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை இன்று உற்சாகத்துடன் முடிப்பீர்கள்.மருத்துவத்துறை மற்றும் பொது சேவையில் உள்ளவர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.
ரிஷபம்:இன்றைய தினம் போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக, உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்களும் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள், மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொதுவாக ஆக்கபூர்வமான நாளாக அமையும்.
மிதுனம்: மனதிற்கு பிடித்தவர்களுடன் உணர்வு ரீதியான பிணைப்பு வலுப்படும். இன்றையை நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சில செயல்பாடுகள் உங்களின் மகிழ்ச்சியை பாதிக்கும் வகையில் அமையும். எனவே, பதற்றத்தை விடுத்து அமைதியான முறையில் அணுகுவது சிறந்த முடிவை தரும்.
கடகம்:ஆக்கப்பூர்வமான நாளாக இருக்காது. பெரிய அளவிலான இழப்புகள் இல்லை என்றாலும், எதையோ தொலைத்து விட்டு தனிமையில் இருப்பதைப் போல் உணர்வீர்கள். குழந்தைகளை பிரிந்ததினால் நீங்கள் மிகவும் தனிமையை உணரக்கூடும்.
சிம்மம்: இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மிகவும் சரியான மற்றும் உறுதியான முடிவுகளாக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் வழக்கமான நிலையே இருக்கும் நிலையில், நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தனிப்பட்ட உறவை பொறுத்தவரை சிறிய சச்சரவுகள் ஏற்படலாம். அவற்றை பெரிய பிரச்சனையாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கன்னி:குடும்ப உறுப்பினர்களின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள். பரிவர்த்தனைகளை திறம்பட செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கும். சச்சரவுகள் சுமுகமாக தீர்க்கப்படும். நடுநிலை தன்மையுடன் செயல்பட்டதன் காரணமாக, உங்கள் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்வீர்கள்.