மேஷம்:பழைய நினைவுகள் உங்களை இன்று சூழ்ந்து கொள்ளலாம். மிக அமைதியாக இருப்பீர்கள். இது உங்கள் அனைத்து பணிகளிலும் வெளிப்படும். செலவுகளை சிறிது கட்டுப்படுத்துவீர்கள். எதிர்காலத்துக்கான சேமிப்பின் அவசியத்தை உணர்வீர்கள்.
ரிஷபம்: சிறிது கடுமையாகவும், ஆளுமையுடனும் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்வீர்கள். இருப்பினும், இதை உறுதி செய்து கொள்ளவும். சந்திக்கும் மக்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். பெரிய முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். வழக்கமான நாட்களைப் போலவே இன்று செயல்படவும்.
மிதுனம்:உங்களின் ஒவ்வொரு செயல் மற்றும் பணியில் முழு நிறைவை எதிர்பார்ப்பீர்கள். இந்த கருத்துரு உங்களுக்குள் அமிழ்ந்திருக்கும். இன்று முழுவதும் எதிர்மறை எண்ணங்களோடு செயல்பட வேண்டும். வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க, சரியான பாதையில் உங்கள் சக்தியை செலவிடவும்.
கடகம்: அதிர்ஷ்டலட்சுமி உங்கள் கதவை தட்டும் நாள் இன்று. அசையா சொத்துக்களில் நீங்கள் மேற்கொண்ட முதலீட்டால், உங்களுக்கு சிறப்பான லாபம் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தை பொறுத்தவரை, மேலதிகாரி மற்றும் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு முழு ஆதரவு தருவார்கள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களிலும் பலன் கிடைக்கும்.
சிம்மம்:எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்று காணப்படுவீர்கள். இன்று நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், எந்த அளவுக்கு உற்சாகத்துடன் செயல்படுகிறீர்களோ, அந்த அளவுக்கு சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி:நிதி ரீதியாக சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம். எனவே, பெரிய முடிவுகளை எடுக்கும்போது, உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக யோசித்து செயல்படவும். உங்களிடம் உள்ள விலைமதிப்பில்லா சொத்துக்கள் அல்லது பொருட்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். எடுக்கும் முடிவு நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், புதிய திட்டங்கள் அல்லது சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.