தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

காதலில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கு.. எந்த ராசிக்கு தெரியுமா? - TODAY RASIPALAN

ஜனவரி 12 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 3:20 PM IST

மேஷம்: நீங்கள் அழகுப் பொருட்கள் தொடர்பான புதிய தொழில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க விரும்புவீர்கள். ஆனால், முடிவெடுப்பது சிறிது கடினமாக இருக்கும். சாத்தியமான வாய்ப்புகளை ஆராய்ந்து, முடிவுகளை மேற்கொள்ளவும்.

ரிஷபம்: நல்ல முறையில் உங்களுக்கான நேரத்தை செலவழிப்பீர்கள். மற்ற நாட்களைப் போல் அல்லாமல், இன்று நீங்கள் அமைதியாக இருந்து புத்துணர்வை பெறுவீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வீர்கள். ஏதேனும் ஒரு வித்தியாசமான சுவை கொண்ட உணவை ருசித்து பார்க்கும் ஆர்வம் இருக்கும்.

மிதுனம்: இன்று முழுவதும் உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். உங்கள் ஆற்றலையும், ஆர்வத்தையும் எப்படி சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து நீங்கள் யோசிப்பீர்கள். மன நிலையில் பெரும் மாற்றங்கள் இருக்கும். தியான பயிற்சிகள் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவது நல்லது.

கடகம்:குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால், முயற்சி பலனளிக்காமல் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு அல்லது சச்சரவு ஏற்படும் வாய்ப்புள்ளது. சூழ்நிலைகளை புன்னகையுடன் எதிர் கொள்ளவும்.

சிம்மம்: உங்களுக்கு இருக்கும் அதிக தன்னம்பிக்கையின் காரணமாக, சிக்கலான விஷயங்களை தைரியமாக மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் தங்கள் துறையில், மேம்பாடு அடைவார்கள். உங்கள் முழு திறமையையும் பயன்படுத்தி, உங்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்குவீர்கள்.

கன்னி:நிதி தொடர்பான சவால்களை ஆவலாக இருப்பீர்கள். வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வம் காரணமாக, பிரச்சனைகளைத் தீர்க்க புதுமையான கருத்துக்கள் மற்றும் வழிமுறைகளை ஏற்படுத்துவீர்கள். உங்களுடைய தற்போதைய வர்த்தக யோசனைகள் சிறப்பான பலன்களை அளித்து ஆச்சரியங்களை அளிக்கும்.

துலாம்: நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த சட்டப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இது நீதிமன்றம் மூலமாகவோ, அல்லது பரஸ்பர புரிந்துணர்வு காரணமாகவோ இருக்கலாம். வேலைப்பளுவை பொருத்தவரை எப்பொழுதும் போல் இருக்கும். பிரச்சினையான சூழ்நிலைகளில் இருந்து தப்பித்து சிறந்த வகையில் திட்டம் தீட்ட உங்களுக்கு நேரம் கிடைக்கும்.

விருச்சிகம்: நீங்கள் ஆகாயத்தில் கோட்டை கட்டும் மனநிலையில் இருப்பீர்கள். ஏக்கமான மற்றும் வருத்தமான சிந்தனைகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், விரைவில் கைவிட்டு போன எதுவும் திரும்ப வராது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடக்கி வாழ்க்கையில் முன்னேறி செல்வீர்கள்.

தனுசு:இன்றைய தினம் சச்சரவுகளும், எதிர்பார்ப்புகளும் அடங்கிய நாளாக இருக்கும். உங்கள் மீது தங்களது கருத்துக்களை திணிக்க விரும்பும் நபர்களிடமிருந்து சிறிது விலகி இருக்கவும். பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையாக கேட்டு, அதனை ஏற்றுக் கொண்டால், சுமுகமான வகையில் சச்சரவுகளை தீர்க்கலாம்.

மகரம்: உங்களது காதலர் மூலம் இன்ப அதிர்ச்சிகள் உங்களுக்கு ஏற்படும். காதல் துணை மீதான காதல் காரணமாக, அவரது ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இருவரும் கடைகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதன் காரணமாக அதிக செலவுகள் ஏற்படலாம். உங்கள் காதலியின் விருப்பத்தை நிறைவேற்றி அவரை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள்.

கும்பம்: நீங்கள் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. நீங்கள் பயணத்தை தனியாக மேற்கொள்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் அழைத்துச் சென்றால், அவர்களது விருப்பமும் உங்களது விருப்பமும் வெவ்வேறாக இருந்து பயணம் மகிழ்ச்சி இல்லாமல் போகக்கூடும். எனினும், அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் சமரசம் செய்துகொண்டு, மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யவும். உங்களது பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ளும் உங்கள் திறமை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மீனம்: அலட்சியமான போக்கு வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக உள்ளது. இன்றைய தினத்தில், நீங்கள் பணியிடத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும், பொறுப்புணர்ச்சியுடன் கவனமாக மேற்கொள்ளவும். எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரப்போகும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நெடுநாட்களாக, நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள் மற்றும் பிற செயல்களை நிறைவேற்றுவீர்கள். அதற்கான பலன்களும் கிடைக்கும்.

ABOUT THE AUTHOR

...view details