மேஷம்:எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்னால், எச்சரிக்கையுன் சிந்தித்து செயல்பட வேண்டும். அவசர முடிவுகள், நீண்டகாலமாக கடும் உழைப்பினால் நீங்கள் சாதித்த விஷயங்களை பெரிதும் பாதிக்கும். இன்றைய காலை சிறிது பதற்றத்துடன் தொடங்கினாலும், மாலையில் குழந்தைகளுடன் நேரத்தைக் கழித்து அவர்களது வீட்டு பாடத்தில் உதவி செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரிஷபம்:இன்று, உங்களது கவனம் உங்களது தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உங்கள் ஆத்மார்த்தமான உறவுகள் மூலம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று முழுவதும் அவர்களது எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.
மிதுனம்:இன்றைய தினத்தில் நீங்கள், தொழிலைவிட உடல் நலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நீங்கள், உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர துறையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். உங்களது சிறந்த மார்க்கெட்டிங் உத்தி மூலம், அதிகபட்ச லாபத்தை ஏற்படுத்த முடியும்.
கடகம்:இன்றைய தினத்தில் நீங்கள், வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்பு பேச்சுக்கள், சிரிப்பு மற்றும் குதூகலம் நிறைந்து, இன்றைய தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாளின் பிற்பகுதியில் நீங்கள், உங்கள் வழக்கமான அமைதியான நிலைக்கு திரும்பி, பணியில் கவனம் செலுத்தி, வேலையை நிறைவு செய்வீர்கள்.
சிம்மம்:பணியிடத்தில் பதவி உயர்வை அடைய உங்கள் வேலையின் மீது நீங்கள் அதிக அளவில் கவனம் செலுத்துவீர்கள். கூடுதல் வேலைகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். இதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் இதற்கான பலன்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
கன்னி:உங்களது குறிக்கோள்கள் மற்றும் அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கான உங்களது ஆர்வம் ஆகியவை இன்று அதிகம் இருக்கும். இன்றைய கடும் உழைப்பிற்குப் பிறகு, புத்துணர்ச்சி பெற, தனிப்பட்ட விருந்து, சமூக நிகழ்ச்சிகள் அல்லது திருமண விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.