மேஷம்: இன்றைய தினத்தில், அலுவலகம் மற்றும் குடும்பம் ஆகிய இரண்டிற்கும் இடையே நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பீர்கள். இரு இடத்திலும் உங்கள் கவனம் தேவைப்படுகிறது. மாலை நேரத்தில், சந்தோஷமாக நேரத்தை கழிக்க நேரத்தை ஒதுக்கவும். புகழ் அடைய வேண்டும் என்பது உங்களது ஆசை நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: ஒரு கண்காணிப்பாளராக, நீங்கள் கூட்டாளிகளுக்கு சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். ஒரு தலைமை பதவியில் இருக்கும் நீங்கள், அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரையும் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்து செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலைகளில் சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.
மிதுனம்:சமூக துறையில் இருப்பவர்கள், மேலதிகாரியிடமிருந்து ஊக்கமும் உதவியும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் எதிர்கொண்டு தீர்த்து விடுவார்கள்.
கடகம்: பணியிடத்தில் நீங்கள், செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான சிந்தனைகள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனதிற்கு நெருக்கமானவருடன், நேரத்தை செலவிடுவதற்காக வேலையை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.
சிம்மம்:உங்களுக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் பிடிக்கும். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன், சுற்றூலா அல்லது பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள். பொதுவாக இன்று சிறந்த நாளாக இருக்கும்.
கன்னி: நீங்கள், இன்று, குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி, செயல் புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாக திறன்கள் மேலும் அதிகரிக்கும்.