நம் முன்னோர்களால் ஆதி காலத்திலிருந்தே உண்ணப்பட்டுவந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தை பிடிப்பவை சிறுதானியங்கள் தான். அதிக சத்துக்களுடனும், மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கும் சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அந்த வகையில், நமது அன்றாட உணவில் சிறுதானியங்களை சேர்ப்பதற்கான எளிமையான உணவு ரெசிபியை உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம். ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சோளத்தை வைத்து செய்யக்கூடிய உப்மாவை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- வெள்ளை சோளம் - 1 கப்
- கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காய்ம் - 1
- பச்சை மிளகாய் - 3
- பீன்ஸ் - 5
- கேரட் - 1
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- சிவப்பு மிளகாய் - 5
- கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சோள உப்புமா செய்முறை:
- முதலில் சோளத்தை எடுத்து நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து மணி நேரம் ஊற வைக்கவும்.
- பத்து மணி நேரம் கழித்து ஊற வைத்த சோளத்தை குக்கரில் சேர்த்து மிதமான தீயில் ஆறு விசில் வரும் வரை வேகவிடவும்.
- ஆறு விசில் வந்ததும், அடுப்பை அணைத்து மூடியை நீக்கி, சோளத்தை வடிகட்டவும்.
- பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து லேசாக வறுக்கவும்.
- பிறகு வேர்க்கடலை, சிவப்பு மிளகாய் மற்றும் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- அடுத்ததாக பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.
- ஐந்து நிமிடம் கழித்து வேகவைத்த பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்னர், வேகவைத்த சோளத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஐந்து நிமிடம் கழித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான சோள உப்மா தயார்.
சோளத்தில் உள்ள நன்மைகள்:
- உடல் எடை அதிகரிக்க உதவுகிறது
- நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கிறது
- செரிமான பிரச்சனையை சீராக்கும்
- இதிலுள்ள பீட்டா கரோட்டின் கண் குறைபாடுகளை சரி செய்யும்.
- இரத்த சோகை அபாயத்தில் இருந்து தடுக்கிறது.
இதையும் படிங்க:கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம்...ஈவினிங் டீ-க்கு பெஸ்ட் காம்பினேஷன்!