தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சிக்கன் எடுத்தா இப்படி செஞ்சு பாருங்க..குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்! - PEPPER CHICKEN RECIPE

எப்போதும் ஒரே மாதிரியான சிக்கனை செய்து சாப்பிடாமல், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும் பெப்பர் சிக்கனை இந்த வாரம் செய்து பாருங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : 5 hours ago

உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்தால், எப்போதும் ஒரே மாதிரியான கறி குழம்பு வைத்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாகவும், தற்போது இருக்கும் வானிலைக்கு இதமாக இருக்கும் பெப்பர் சிக்கன் ப்ரையை ஒரு முறை செய்து பாருங்கள். கட்டாயம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். முறையான பெப்பர் சிக்கன் செய்முறை இதோ உங்களுக்காக..

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் - 1/2 கிலோ
  • வெங்காயம் - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • காய்ந்த மிளகாய் - 2
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் - 2 டீஸ்பூன்
  • கிராம்பு - 3
  • ஏலக்காய் - 2
  • பட்டை - 1
  • எண்ணெய் - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

பெப்பர் சிக்கன் ப்ரை செய்முறை:

  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து அதனுடன் நீட்டமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  • அடுத்ததாக, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி சேர்க்கவும்.
  • பின், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது, கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  • சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வரும் போது, அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைத்து விடுங்கள்.
  • பின்னர், தண்ணீர் நன்கு சுண்டி சிக்கன் வெந்ததும், நறுக்கி வைத்த கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கினால் சுவையான பெப்பர் சிக்கன் ரெடி. விருப்பப்பட்டால் இறக்கும் போது கொஞ்சமாக மிளகு பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

ABOUT THE AUTHOR

...view details