இன்றைய தலைமுறையினர் மத்தியில் இதன் மவுசு குறைந்திருக்கலாம்...ஆனால் ஆண்டு 2000க்கு முன்பாக பிறந்தவர்களுக்கு இந்த தேன் மிட்டாய் தான் கிங்கு. வீட்டில் காசு கொடுத்து ஏதாவது பொருள் வாங்கி வரச்சொன்னால், போனதற்கு கூலியாக தேன் மிட்டாயை சாப்பிட்டு வருவோம்..ஞாபகம் இருக்கா? பெட்டிக்கடையில் இருக்கும் கண்ணாடி ஜாரில் இருந்து நாம் சாப்பிட்ட தேன் மிட்டாயின் சுவை இப்போது எங்கு தேடினாலும் கிடைப்பதில்லை. அதற்காகவும், உங்கள் மலரும் நினைவுகளை கொண்டு வருவதற்காகவும் இந்த தேன் மிட்டாய் ரெசிபியை கொண்டு வந்திருக்கிறோம்..செய்து பாருங்கள்...
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு - 1 கப்
- கார்ன்ஃப்ளார் மாவு - 1 டீஸ்பூன்
- பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
- சர்க்கரை- 1 கப்
- தண்ணீர் - 3/4 கப்
- ஃபுட் கலர் - கால் தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - பொரிப்பதற்கு போதுமானது
- ஏலக்காய் தூள் - தேக்கரண்டி
- உப்பு - 1 சிட்டிகை
தேன் மிட்டாய் செய்முறை:
- முதலில், ஒரு அகல பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும் (பேக்கிங் பவுடருக்கு பதிலாக பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்)
- இதனுடன் ஃபுட் கலர் சேர்த்து மாவை நன்கு கலந்து விடவும். பின்னர், மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு மென்மையாக பிசையுங்கள்
- பிறகு, மாவில் எண்ணெய் தடவி சிறிது நேரம் மூடி வைத்துக்கொள்ளுங்கள்