அன்றாட சமையலுக்கு தேவைப்படும் கொத்தமல்லியை தினமும் காசு கொடுத்து வாங்குறீங்களா? வீட்டில் கொத்தமல்லி நட்டு வைத்தால் வாடிபோகிறதா? இனி, கவலைய விடுங்க..அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய கொத்தமல்லி செடியை வேகமாகவும் செழிப்பாகவும் எப்படி வளர்க்க வேண்டும் என்ற டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
வீட்டில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி?:
- ஸ்டெப் 1: நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லி விதைகள், அல்லது நர்சரியில் இருந்து வாங்கி வந்த கொத்தமல்லி செடி விதைகளை பாதியாக உடைத்துக்கொள்ளவும்.
டிப்: விதைகளை இரண்டாக உடைப்பதற்கு, ஒரு துணி பையில் விதைகளை போட்டு, சப்பாத்தி கட்டையால் பையின் மீது லேசாக அழுத்தம் கொடுத்து தேய்தால் விதைகள் இரண்டாக உடைந்து வரும்.
- ஸ்டெப் 2: நாம் உடைத்து வைத்துள்ள விதைகளை ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். இப்படி செய்வதால் விதை சீக்கிரமாக தளிர் விட ஆரம்பிக்கும்.
- ஸ்டெப் 3: இப்போது, குரோ பாக், மன் பானை அல்லது நீங்கள் எதில் கொத்தமல்லி இலைகளை வளர்க்க போகிறீர்களோ அதில் மண்ணை சேர்த்து, ஊறவைத்த விதைகளை தூவி விடவும். பின்னர் கைகளை பயன்படுத்தி அதிகம் அழுத்தம் கொடுக்காமல் மண் போட்டு மூடவும்.
டிப்: மண் மீது அப்படியே விதைகளை தூவி விடுவதற்கு பதிலாக, விரலை பயன்படுத்தி மண் மீது வரிசையாக கோடு போட்டுக்கொள்ளவும். இப்போது, அந்த குழிகளில் மட்டும் தேவையான அளவு விதைகளை சேர்க்கவும்.
- ஸ்டெப் 4:தினசரி காலை மற்றும் மாலையில் தண்ணீர் தெளித்து விடவேண்டும். மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்படி செய்து வருவதன் மூலம் 10 நாளில் கொத்தமல்லி விதைகள் தளிர் விட்டு நன்கு வளர்ந்திருக்கும். மண்ணில் ஈரப்பதம் இல்லை என்றால் இலைகள் வாட ஆரம்பித்துவிடும். கொத்தமல்லி இலைகளில் பூ வளர ஆரம்பிக்கும் முன்னர் அறுவடை செய்யவும்.