தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

பளபளக்கும் கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த விதையில் தயார் செய்யும் ஃபேஸ் பேக் அப்ளை செய்ங்க! - KOREAN GLASS SKIN FACE PACK

கொரிய பெண்களை போல் கண்ணாடி சருமத்தை பெற, கிட்சனில் இருக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக் எப்படி செய்வது என பார்ப்போம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 11, 2025, 11:28 AM IST

கொரியாவில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சருமமும் கண்ணாடி போல மினுமினுப்பாகவும் மென்மையாகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அவர்களை போன்ற சருமத்தை பெற அனைவரும் விரும்புகிறோம். அதில் நீங்களும் ஒருவரா? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஃபேஸ் பேக் அதற்கு உதவியாக இருக்கும். கண்ணாடி போன்ற சருமத்தை பெற ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என பார்க்கலாம் வாங்க..

சியா விதைகள் சருமத்திற்கு எப்படி உதவுகிறது?: ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த சியா விதைகள், சருமத்தில் கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்ற சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது. சியா விதைகள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கின்றன.

கோப்புப்படம் (Credit - Freepik)

கூடுதலாக, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதால் சருமம் பளபளப்பாகவும் பொலிவாகும் ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கும். சியா விதையில் உள்ள லினோலெனிக் அமிலம் சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக NCBI தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

கற்றாழை ஜெல் செய்யும் மாற்றம்?:கற்றாழையின் இயற்கை மூலப்பொருட்களான, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. சரும வறட்சி மற்றும் காயங்களை குணப்படுத்த கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. NCBI நடத்திய ஆய்வில், புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை கற்றாழை பாதுக்கப்பதாக தெரியவந்துள்ளது.

ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி?:

தேவையான பொருட்கள்:

  • சியா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
  • வெதுவெதுப்பான பால் - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஆலோ வேரா ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் சியா விதைகள் மற்றும் பால் சேர்த்து கலந்து 1 மணி நேரத்திற்கு ஊறவைத்து விடுங்கள். பின்னர், அதில் தேன், கற்றாலை ஜெல் சேர்த்து கலந்து வைக்கவும்.

கோப்புப்படம் (Credit - Freepik)

அப்ளை செய்யும் முறை?:இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகம் மற்றும் கைகளை கழுவி சுத்தமான துணியால் துடைக்கவும். இப்போது, முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஃபேஸ் பாக் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கழுவும் போது, முகம் மற்றும் கழுத்து பகுதியில் மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் நீங்கும். பின்னர், முகத்தை சுத்தமான துணியால் துடைத்து நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் மாய்ஸ்ரைசரை பயன்படுத்தவும். இதனை வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை பயன்படுத்தவும்.

இதையும் படிங்க:

30 வயதில் தோல் சுருக்கம் பற்றிய பயமா? 20 வயதில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்பு!

இயற்கையான முறையில் முகம் பளபளக்க இந்த பழம் போதும்..5 நிமிடத்தில் இன்ஸ்டண்ட் க்ளோ நிச்சயம்!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details