காத்மண்டு: நேபாளத்தில் இரு பெரும் கட்சிகளான நேபாலி காங்கிரஸ் மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிகள் இணைந்து அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து பிரதமர் பிரசந்தா தலைமையிலான அரசு கவிழும் சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாலி காங்கிரஸ் தலைவர் ஷேர் பஹதுர் தியுபா மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி ஆகியோர் நேபாளத்தில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக நள்ளிரவில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும், கேபி சர்மா ஒலி பிரதமராக பதவியேற்று கூட்டணி ஆட்சியை வழிநடத்திச் செல்லவும், இரு கட்சிகளிடையே ஒருமித்த கருத்துக்கு உடன்பாடு ஏற்பட்டதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேபி சர்மா ஒலி விரைவில் பொது மக்களிடையே அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் கமல் தஹல் பிரசந்தா தமையிலான அரசுக்கு கடந்த நான்கு மாதங்களாக வழங்கி வந்த ஆதரவை நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து அவர் விரைவில் பதவி விலகுவார் எனக் கூறப்படுகிறது. நேபாலி காங்கிரஸ் மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிகளிடையே போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி கேபி சர்மா ஒலி ஒன்றரை ஆண்டுக பிரதமராகவும் மீதமுள்ள பதவிக் காலத்தில் ஷேர் பஹதுர் தியுபா பிரதமராக பதவி வகிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.