தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - Chile Earthquake - CHILE EARTHQUAKE

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிர் சேதம் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் மீடபு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Etv Bharat
Representational Image (File)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 9:46 AM IST

சிலி: தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 7.3 ரிக்டராகப் பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைகடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கமானது சிலி நாட்டின் கடற்கரை நகரமாக அன்டோஃபகாஸ்டாவில் பூமிக்கு அடியில் 126 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. நிலநடுக்கம் கடற்கரை நகரத்தில் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. முன்னதாக கடந்த ஜனவரி மாதம், வடக்கு சிலியின் டாராபாக்காவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சில நாடு பசிபிக் ரிங் ஆப் பயர் எனும் பகுதியில் அமைந்துள்ளது. பசிபிக் ரிங் ஆப் பயர் என்பது பசிபிக் பெருங்கடலின் படுகையில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும், அங்கு பல பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அந்தப் படுகையில் அமைந்துள்ள சிலியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாகவே இருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு சிலி நாட்டில் 8.8 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 526 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் குறித்து சிலி அதிபர் கேப்ரியல் போரிக் வெளியிட்ட பதிவில், சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்ட போதும், சுனாமி தாக்குதலுக்கான அச்சம் இல்லை என்றும் தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எந்த உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வங்கதேச கலவரம்: 30 பேர் பலி! வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் என்ன பிரச்சினை? - Bangladesh job quota protest

ABOUT THE AUTHOR

...view details