சிகாகோ :அமெரிக்காவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். சிகாகோ அடுத்த ஜாய்லாட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து திங்கட்கிழமை அதே பகுதியில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு நாட்கள் அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர் விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ரோமியோ நான்சே என்றும் என்ன காரணத்திற்காக அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து பொது எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.